வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (30/03/2016)

கடைசி தொடர்பு:11:37 (30/03/2016)

ரோஜா இரண்டாம் பாகமா? உண்மை என்ன!

மணிரத்னம் ஓ காதல் கண்மணி படத்தையடுத்து தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் பிசியாகிவிட்டார், கார்த்தி, சாய் பல்லவி நடிக்கும் இப்படத்தின் கதை தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு ரோஜா பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரோஜா படத்தின் காட்சிகளும், பாடல்களும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை. அந்தப் படம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற மிகப்பெரிய இசை நாயகனையும் அறிமுகம் செய்தது. எனினும் ரோஜா இரண்டாம் பாகமா என்ற சந்தேகம் எழவே நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது.

அந்தக் கதை வேறு, இந்தக் கதை வேறு . ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்தில் கொடுத்ததைப் போன்ற இசை மேஜிக்கை இதில் காட்டுவார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்