கலாபவன் மணிக்கு கைமாறு செலுத்தும் நண்பனின் செயல்!

லையாள மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. கடந்த 6ம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் மரணம் குறித்த எந்த மர்மமும் விலகாமலே இருந்துவருகிறது.

இந்நிலையில், அவரின் சொந்த ஊரான சாலக்குடியில், அவரது பெயரிலேயே மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டிவருகிறார் மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரான திலீப்.   திலீப்பும், கலாபவன் மணியும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “சல்லாபம்”. இந்தப் படம் தான் கலாபவன் மணிக்கு மலையாளத்தில் பெயர் வாங்கிகொடுத்து. மேலும் திலீப்பிற்கு ஹிட் கொடுத்தப் படமும் கூட. 

அன்றுமுதலிருந்தே நெருங்கிய நண்பர்களான இருவரும் மாறினார்கள். சமீபத்தில் தியேட்டர் கட்ட தீர்மானித்து அதற்கான வேலைகளில் இருந்தார் திலிப். அந்த நேர்த்தில் கலாபவன் மணியையும் சேர்த்துக்கொள்ளளாம் என்று நினைத்திருந்தார். ஆனால், மணியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தார் திலீப்.

அதனால் மணியின் சொந்த ஊரான சாலக்குடியிலேயே, அவரின் பெயரில் தியேட்டர் ஒன்றை கட்டிவருகிறார். அவர் இல்லையென்றாலும் காலத்திற்கும் அவரின் பெயரை இந்த தியேட்டர் சொல்லும் , இதுவே என் நண்பனுக்கு நான் செலுத்தும் சமர்ப்பணம் என்கிறார் திலீப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!