வறுமையில் வாடும் ”நூறாண்டுகாலம் வாழ்க” பாடல் புகழ் சரளா - விஷால் உதவிக்கரம்! | Vishal helped veteran singer Sarala

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (30/03/2016)

கடைசி தொடர்பு:13:29 (30/03/2016)

வறுமையில் வாடும் ”நூறாண்டுகாலம் வாழ்க” பாடல் புகழ் சரளா - விஷால் உதவிக்கரம்!

ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் போன்ற படங்களில் பாடல்கள் பாடியவர் பழம்பெரும் பாடகி சரளா. “நூறாண்டு காலம் வாழ்க.... நோய் நொடி இல்லாமல் வளர்க”... என இவரது இந்தப் பாடல் இப்போதும் திருமண, குழந்தை பிறப்பு வீடுகளை அலங்கரிக்க தவறுவதில்லை.

பலரது சந்தோஷ தருணங்களிலும் முதன்மை வகிக்கும் பாடல் பாடிய சரளா மற்றும் அவருடைய இரண்டு பெண்களும் தற்சமயம் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே வருமானமின்றி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை பத்திரிகை வாயிலாக அறிந்த விஷால் உடனே அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி சரளாவின் குடும்பத்தாருக்கு மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000 தருவதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி அவரது வீட்டுக்கு விஷாலின் அறக்கட்டளையிலிருந்து பண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்