”தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை” கிஷோரின் தந்தை உருக்கம்!

இறந்த பிறகும் கூட தனது இரண்டாவது தேசிய விருதை வாங்கி பெற்றோர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார் எடிட்டர் கிஷோர். உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டிய தருணமிது. இந்நிலையில் அவரது அப்பாவோ வேறு விதமாக மனக் கஷ்டத்தைப் பகிர்ந்துள்ளார்.

பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, ”ஒரு வருடம் கடந்துவிட்டது என் மகன் இறந்து , ஆனால் சினிமாத் துறை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. என் மகன் தேசிய விருது பெற்றிருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குநர் போன் செய்து எங்களுக்கு தெரிவித்தார்”. ”ஆடுகளம் உருவான வேளையில் தனுஷும், என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

”இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் இன்றுவரை தனுஷிடமிருந்து எனக்கு ஒரு போன் அழைப்புக் கூட வரவில்லை. சிவகார்த்திகேயன் 2 லட்சம், சரத்குமார் ஒரு லட்சம் கொடுத்தார். ராகவா லாரன்ஸும், வெற்றிமாறனும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் இரண்டு படங்கள் வேலை செய்தமைக்கு 3 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது இன்னும் தரவில்லை".

”இந்த விருதை வைத்துக்கொண்டு என்ன பண்ண, என் மகன் விருதைத் தாண்டி எதுவும் பெறவில்லை, அவனது கடின உழைப்புக்கும் , போரட்டத்துக்கும் இரண்டாவது விருதும் கிடைத்துள்ளது, அதைத் தாண்டி இந்த சினிமா என்ன கொடுத்துள்ளது ஒன்றுமில்லை. எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூட ஆளில்லாமல் இருக்கிறோம்” என மகனை இழந்த 73 வயதான ஒரு அப்பாவாக நொந்து போயுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!