பின் லேடன் திருச்சி வருகிறார்! | Mirchi Shiva's next movie named as Bin Laden

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (31/03/2016)

கடைசி தொடர்பு:13:41 (31/03/2016)

பின் லேடன் திருச்சி வருகிறார்!

144 படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் காமெடி படமொன்றில் நடிக்கிறார் மிர்ச்சி சிவா.அந்தப் படத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் செம ஹைலைட். பின்லேடன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் டார்க் காமெடி எனப்படும் கொஞ்சம் வன்முறையும் , அரசியலும் கலந்த காமெடிப் படமாக உருவாகி வருகிறது.

புது இயக்குநர் அரவிந்த் இயக்கம். ”தேரே பின்லேடன்” இந்திப் படத்தின் கதையா எனக் கேட்டபோது இயக்குநர் அரவிந்த், கண்டிப்பாக இல்லை, இந்தப் படத்தின் கதையும் அந்தப் படத்தின் கதையும் வேறு. இந்தக் கதை திருச்சியில் நடக்கிறது.

படத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒரு கதையில் பின்லேடன் திருச்சி வருகிறார் , அங்கு அவர் சந்திக்கும் பிரச்னை தான் கதை. இன்னொரு கதையில் சிவா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார். இரண்டு கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் படம் இருக்கும். பின்லேடனாக நடிக்கும் நடிகர் தான் இன்னும் முடிவாகவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் படத்தில் சிவா கொஞ்சம் நடனம் ஆடியிருக்கிறார். மாயா ஹீரோயினாக நடிக்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்