ரசிகர்களால் ரஜினிக்கு நோட்டீஸ்... மாஸ் ஹீரோக்களுக்கு வருகிறது சிக்கல்!

இந்திய சினிமாவைப் பொருத்தமட்டில் ஒரு நாயகனை பிடித்துவிட்டால் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட விழாவே எடுத்துவிடுவார்கள். மாலையிட்டு , பாலாபிஷேகம் செய்து என ஒவ்வொரு ஏரியாவும் கலை கட்டும். அதிலும் நம் தமிழ் ரசிகர்களைக் கேட்கவா வேண்டும். ரஜினிகாந்த், கமல், விஜய் , அஜித், ஏன் சிம்பு, தனுஷ் என யாரையும் விட்டு வைப்பதில்லை.

இவர்கள் படங்கள் வெளியீடு எனில் அந்தத் திரையரங்கம் உள்ள ஏரியாவே விழாக்கோலம் ஆகும், லிட்டர் கணக்கில் பால் ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால் இனி இப்படி பாலாபிஷேகம் செய்வதில் சிக்கல் உண்டாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.ஐ.எம்.எஸ் மணிவன்னன். இவர் கடந்த 26ந் தேதி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கில், நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்குவதையொட்டி அவரின் ரசிகர்கள் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்றும், இதனால் பல்லாயிரம் லிட்டர்கள் பால் வீணடிக்கப்படுவதாகவும், இவற்றிற்கு தடை விதிக்கவும் கோரி வழக்குத் தொடுத்துள்ளார். 

அதனை ஏற்ற நீதிமன்றம் நடிகர் ரஜினி, கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனல் கூறியுள்ளது. இதில் உண்மையிருப்பினும் இப்படி எல்லாருக்கும் சட்டம் போட்டால் நடிகர்களின் நிலை என்ன என்னும் கேள்விகளும் எழுந்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!