வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (01/04/2016)

கடைசி தொடர்பு:10:39 (01/04/2016)

அடுத்தப் படத்திற்காக சிம்பு எடுக்கப்போகும் ரிஸ்க்!

ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் ஓய்ந்து பட வேலைகளில் பிசியாகிவிட்டார் சிம்பு, கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அடுத்தப் படம் என சிம்பு செம பிஸி.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இளசுகளிடம் தனி இடம் பிடித்த ஆதிக் ரவிசந்திரன் படமென்றால் அதற்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் சிம்பு வேறு ஹீரோ என்னும் நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப் படத்தில் சிம்புவுக்கு மூன்று கெட்டப்களாம்.

அதில் ஒரு பாத்திரம் எடை அதிகமானவராக சிம்பு இருக்க வேண்டுமாம். இந்த கேரக்டருக்காக சிம்பு சுமார் 20 கிலோ வரை எடை கூட்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தமாதம் துவங்கப்பட உள்ள இப்படம் சிம்புவுக்கு மிக முக்கியமான படமாகவும் பார்க்கப்படுகிறது. எதையுமே சிம்பு டெரரா தான் செய்வாரு போல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்