வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (01/04/2016)

கடைசி தொடர்பு:11:01 (01/04/2016)

”பிரகாஷ்ராஜ் மீது புகார் கொடுப்பேன்” மறைந்த கிஷோரின் தந்தை அறிவிப்பு!

மறைந்த கிஷோரின் தந்தை ஏற்கனவே தனது மகனை இழந்து ஆதரவற்று இருக்கிறார். இரண்டு முறை தேசியவிருது பெற்று பெருமை சேர்த்தார் கிஷோர். ஆனால் சினிமா தனது மகன் இறப்புப் பிறகு தங்களை மறந்துவிட்டதாக அவரது தந்தை வருத்தம் தெரிவித்தார். தனுஷ் ஒரு போன் கூட செய்து எங்களுக்கு பேசவில்லை எனவும் கூறிய கிஷோரின் தந்தையிடம் பிரகாஷ் ராஜ் பேரம் பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் அவரது மகனுக்கு இரண்டு படங்களில் வேலை செய்தமைக்கு 3 லட்சம் தரவேண்டியுள்ளது அதை இன்னும் தரவில்லை. 

இந்தச் செய்தி நமது சினிமா விகடன் பக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தரவேண்டிய பணத்தைத் தராமல் பேரம் பேசுவதாகக் சமீபத்திய செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் கிஷோரின் தந்தை. பிரகாஷ்ராஜ் லேப்டாப் ஒன்று கிஷோர் வீட்டில் இருக்கும் பட்சத்தில் ஒரு லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் , லேப்டாப்பை திரும்பிக் கொடுத்து விடுங்கள் என பிரகாஷ் ராஜ் தனது மேலாளர் மூலம் பேரம் பேசுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த லேப்டாப் எந்த வகையிலும் எங்களுக்கு உதவாது, மேலும் முழு பணம் கொடுத்தால் லேப்டாப்பைக் கொடுக்கத் தயார் எனவும், தராத பட்சத்தில் பிரகாஷ் ராஜ் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மறைந்த தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் தந்தை பொன்னுசாமி..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்