வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (01/04/2016)

கடைசி தொடர்பு:18:05 (01/04/2016)

விஜய்,அஜித் படத்தில் கூட நடக்கவில்லை- விஜய்சேதுபதி படத்தில் நடக்கப்போகிறது!

ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான படம் ‘அமரகாவியம்’. இப்படத்தின் இசைவெளியீட்டை அவ்வளவு சாதாரணமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிடமாட்டார்கள். காரணம் நயன்தாரா, த்ரிஷா என இருவரும் இணைந்து படத்தின் பாடல்களை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய பார்த்திபனே ஆர்யா உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், அப்படி இருந்தால் தானே நயன்தாரா, த்ரிஷா இருவரையும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சிக்கு வரவழைக்க முடியும் என பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன்தாரா, த்ரிஷா இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார் போடா போடி, நானும் ரவுடிதான் புகழ் விக்னேஷ் சிவன். படத்துக்கு இசை அனிருத்.

 

இந்தப் படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தற்சமயம் ஆறு படங்களில் நடித்து வருகிறார். சென்ற வருடம் விஜய் சேதுபதிக்கு டாப் மார்கெட் கொடுத்த படம் நானும் ரவுடிதான் என்றாலும் மிகையாகாது. மீண்டும் இதே வெற்றிக் கூட்டணி தற்போது இணைந்துள்ளது.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும், நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குத் தெரிந்து விஜய் அஜித் , படங்களில் கூட நயன், த்ரிஷா இணைந்து நடித்ததில்லை. பாஸ் நீங்க சுமார் மூஞ்சிக் குமாரா! டவுட்டா இருக்கு!!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்