விஜய்க்கு சிலை திறப்பா..? பரபரப்பு தகவல்!!

ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்தது ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா.

கடந்த மார்ச் மாதம் சென்னை சத்யம் திரையரங்களில் இவ்விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது  விஜய்க்கு ஆச்சர்யமூட்டும் விதமாக விஜய்யின் மெழுகு சிலையை திறந்துவைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்களாம்.

இதனை கடைசி நேரத்தில் தெரிந்துகொண்ட விஜய் தரப்பினர், “படத்தின் ரிலீஸ் நேரத்தில் இதுபோன்று ஏதாவது செய்து அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம்” எனக்கூறி தடுத்துவிட்டதாக தெரிகிறது.

அதனால் அந்த மெழுகு சிலையை அப்படியே வைத்திருந்து ‘தெறி’ படம் வெளியானதும் அப்படத்தின் வெற்றி விழாவில் சிலை திறப்பை நடத்திக் கொள்ளலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

எப்புடியோ விஜய்க்கு தெறி ஸ்பெஷல் சிலை ரெடி!!

-தாட்சாயிணி-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!