தற்கொலை செய்த பிரதியூசாவின் உருகவைக்கும் காதல் ஸ்டேட்டஸ்

தொடரும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை மீண்டும் மீண்டும் நம்மை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. பிரதியூஷா என்றால் பலருக்கும் தெரியாத நிலையில் மண்வாசனை ஆனந்தி என்றால் நம் வீட்டில் தாய்மார்களின் கண்கள் விரிந்து சோகத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.

அந்த சீரியலின் கதையே பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லும் சீரியல் தான் முக்கியமாக குழந்தைத் திருமணம், அதற்காக நடக்கும் போராட்டம்,  ஒரு குழந்தை திருமணம் செய்துகொண்டால் என்னென்ன கொடுமைகளை பிஞ்சு வயதில் அனுபவிக்கிறார் என்பதே சீரியலின் கதை. இதில் நாயகியாக நடித்திருப்பவரே பிரதியூஷா. ஆனந்தி என்னும் கேரக்டர் நம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சிறு வயது பாத்திரத்தில் அவிகா கோரும், வளர்ந்த நாயகியாக பிரதியுஷாவும் நடித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரதியூஷா. இதுகுறித்து அவரது தோழியும், நடிகையுமா டோலி பிந்த்ரா கூறுகையில் , பிரதியூஷா கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க முடியாது. அவள் மிகவும் வலிமையான பெண். எனவும் இது திட்டமிட்ட கொலையாகவே தெரிவதாகக் கூறியுள்ளார். மேலும் அவரது நண்பரும் நடிகருமான அஜஸ் கானும் இது கொலையாக இருக்கலாம் என்று பதிவு செய்துள்ளார். இந்நிலையில் காதலனாக சொல்லப்படும் ராகுல் சிங் போலீசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பிரதியூஷா கடந்த ஓரிரு மாதங்களாகவே சரியான மனநிலையில் இல்லை என ஒரு தரப்பில் சொல்லபப்டுகிறது.

அவரது வாட்ஸப் ஸ்டேட்டஸில் கடைசியாக “ எனது மரணத்திற்கு பிறகும் கூட எனது முகத்தை உன்னை விட்டு திருப்ப மாட்டேன்”   என இந்தியில் வைத்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதத்தில் கடைசியாக ஒரு ட்வீட்டை டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள பிரதியூஷா அதன் பிறகு ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட தளங்களில் ஈடுபாடு செலுத்தவில்லை.

இந்நிலையில் அவரது நண்பர்கள் பலரும் ராகுல் சிங்கால் சில நாட்களாகவே அவர் பிரச்னைகளை சந்தித்துள்ளதாகவும், எல்லாருடைய பிறந்த நாள் பார்ட்டிக்கும் தவறாது செல்லும் பிரதியூஷா அண்மையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்துள்ளார், எல்லாவற்றிற்கும் மேல் பிரதியூஷாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே காதலர் ராகுல் சிங்   கிளம்பிவிட்டதையும் மறக்க முடியாது என்கிறார்கள் நண்பர்கள். எனினும்  பிரதியூஷா இறந்துவிட்டார் என்பது தான் உண்மை. இன்றும் அவர் நடிப்பில் மண்வாசனை சீரியல் ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அவரது அறியாத முகத்திற்கும், பளீர் சிரிப்பிற்கும் நம் தமிழ் நாட்டில் கூட ரசிகர்கள் அதிகம். 

என்றுதான் இந்தத் தற்கொலைகளுக்குத் தீர்வுகள் கிடைக்குமோ!

-ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!