உசிலம்பட்டியில் குற்றப்பரம்பரை தொடக்கம் - பாரதிராஜா அதிரடி

தென் தமிழகத்தின்  குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததால் அவர்களை ‘குற்றப்பரம்பரை’ என அப்போது பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது. அதனால், அப்பகுதிகளிலுள்ள ஆண்கள் எல்லோரும் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டாகவேண்டும். பல்லாண்டுகள் நீடித்த இந்நிலையை பெரிய போராட்டங்களுக்குப் பிறகு மாற்றினார்கள். இந்த வரலாற்றுப்பின்னணியை வைத்து குற்றப்பரம்பரை என்கிற படத்தை இயக்கவிருப்பதாக பாரதிராஜா சில ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். அண்மையில் இயக்குநர் பாலா வும் குற்றப்பரம்பரை படத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனால் இப்படத்தை யார் இயக்குவது என்பதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறி இருக்கிறது.பாலா தரப்பில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் பாரதிராஜா தரப்பில்  எழுத்தாளர் ரத்னகுமாரும் கருத்துகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

 
பாரதிராஜாவும் பாலாவும் இதுவரை இச்சிக்கல் பற்றி எதுவும் சொல்லவில்லை . ஆனால் இயக்குநர் பாரதிராஜா, அதிரடியாக குற்றப்பரம்பரை படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம். அவருடைய அன்னக்கொடி படத்தை ஊரில் வைத்துத் தொடங்கிய மாதிரி இந்தப்படத்தையும்  உசிலம்பட்டியில் நாளை தொடங்கவிருக்கிறார்கள். 
 
தொடக்கவிழாவின் போது. படத்தில் நடிக்கவிருக்கிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களை அறிவிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக பாரதிராஜா மற்றும் அவருக்கு ஆதரவான முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் உசிலம்பட்டி செல்லவிருக்கிறார்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!