நயன்தாரா மீது தாக்குதலா?நடந்தது என்ன...இந்த வார ஃப்ளாஷ்பேக்! #WeeklyViral | Weekly viral of tele -cine news

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (02/04/2016)

கடைசி தொடர்பு:19:37 (02/04/2016)

நயன்தாரா மீது தாக்குதலா?நடந்தது என்ன...இந்த வார ஃப்ளாஷ்பேக்! #WeeklyViral

ந்த வாரம் நம்மை பரபரப்பாக்கிய பகிரங்கங்கள் இவைகள் தான்..

வாரம் ஆரம்பமே ”தி அவார்ட் கோஸ் டு” பாணி தான். தேசிய விருது அறிவிப்பு. விசாரணை சிறந்த தமிழ் படம், சிறந்த குணச்சித்திர நடிப்பு, சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகளுடன் கம்பீர நடை போட்டது...இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசை விருது....வாழ்த்துகள் !

 

என்னதான் விசாரணைப் படத்துக்கு அவார்டு கிடைச்சாலும் இந்த உசுரக் குடுத்து நடிச்ச சியானுக்கு விருது கிடைக்கலயே பாணியில் ஆளாளுக்கு கண்டனங்களும், வருத்தங்களுமாக மூக்கை சிந்த, சமூக வலைகள் மீம்ஸ்களால் நிரம்பின.. இந்த மீம்ஸ கண்டுபிடிச்சது யாருப்பா!

கிஷோர் இரண்டு முறை தேசிய விருது என்றாலும் அவர் அப்பாவோ என்ன விருது வாங்கி என்ன புண்ணியம் என் மகனோட உயிர் போயி நாங்க ஆதரவில்லாம நிற்கறோம் என பேச மீண்டும் மீடியாக்கள் அல்ர்ட் ஆகின.மேலும் பிரகாஷ் ராஜ் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் பேரம் பேசுவதாகச் சொல்ல பிரகாஷ் ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தமாக அமைந்தது... வலிச்சா தாங்கணும் கத்தக்கூடாது என்கிறது பிரகாஷ் ராஜ் தரப்பு...

நானும் இருக்கிறேன் ரகமாக ட்விட்டரில் கெத்து காட்டினார் உதயநிதி ஸ்டாலின். வைகோவுக்கு புடவையும், ஜெயலலைதாவுக்கு வேட்டி சட்டையும் போட்டு போட்டோ ரிலீஸ் செய்து பூகம்பத்தை உருவாக்கினார் பற்றிக்கொண்டது நெட்...ஃபேக்டு! ஃபேக்டு!! ஃபேக்டு!!!

ராஜா சாருக்கு நீங்க ரெக்கமெண்ட் பண்ணீங்களா?.... என விருதுக் குழுவில் இருந்த கங்கை அமரனிடம் மைக்கை நீட்ட ,அண்ணன், தம்பிக்கெல்லாம் வேலையே இல்ல. நான் எல்லா மொழி சார்பாவும், எல்லா படங்கள் சார்பாவும் இருந்து முடிவெடுக்கணும். எந்த ரெக்கமெண்டும் நான் பண்ணல என்றார்...நல்லவேளை அறிவிருக்கானு கேக்கல!

செம ஹிட் பேய்ப் படமாக தற்சமயம் மக்களால் கொண்டாடப்படுவது கான்ஜூரிங் படம் தான். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களையும், ஹாரர் ரசிகர்களையும் வாவ்டா!  சொல்ல வைத்தது....ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தான்!

கான்ஜூரிங் 2டிரெய்லருக்கு:http://bit.ly/1PzSoKE 

பதினேழாயிரம் பாடல்கள் பாடியிருக்காங்களா சுசிலாம்மா! என அடுத்த பிரேக்கிங். நம்மூர் பெண்கள் தான் சர்வ சாதரணமாக கின்னஸில் இடம் பிடிக்கிறார்கள் என டீ- கடை முதல் டீப்பாய் கடை வரை சுசிலாம்மா ரெக்கார்ட் பிரேக்காக நலந்தானா எனக் கேட்க வைத்தார்... மாலைப் பொழுதின் மயக்கத்திலே!

விஜய் , அஜித் என கேரளாவில் இருவரும் தங்களுக்கு ஒரு தனி இடங்களைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் நம்மூர் தமிழ் பட பாணியில் துல்கர் சல்மான், சாய் பல்லவி நடித்த கலி படத்தில் ஆலுமா டோலுமா பாடல் இருக்கிறதாம் என ரசிகர்களுக்கு உற்சாகம் உண்டாக்கியது.... அப்பறம் என்ன தலடா தான்!

என்னது விஜய் சேதுபதிக்கு ஜோடியா நயன்தாரா , த்ரிஷாவா?... என தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்திருக்கிறது நானும் ரவுடி தான் பட டீம்... படத்துக்கு பேரு காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்கம் விக்னேஷ் சிவன், இசை அனிருத்தாம், என கொஞ்சம் பொறாமை பொங்க பெரு மூச்சு விடுகிறது கோலிவுட்... மனசத் தேத்திக்கங்க பாஸ்! 

சிரஞ்சீவியின் மகளும், ரம் சரணின் சகோதரியுமான ஸ்ரீஜாவின் திருமணம் தெலுங்கு உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் படி நடக்க, பல விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும் திருமணம் குறித்து இந்தியா முழுவதும் பேச வைத்துவிட்டார்கள்...உங்களுக்கு , எனக்கு , எல்லாருக்கும் டைமண்ட் ஜுவல்ஸ்!

ஸ்ரீஜா திருமண ஆல்பத்திற்கு க்ளிக் செய்க: http://bit.ly/25tWm3e 

நயன்தாராவுக்கு நாலு கோடி சம்பளம் என்னும் செய்தியே அடங்காமல் இருக்க என்னது இவருக்கு இவ்வளவு சம்பளமா என அஜித்தின் அடுத்தப் படத்திற்கு 35 கோடி சம்பளம் என செய்தி பரவ, நமக்கு தொண்டையைக் கவ்வி, கண்களைக் கட்டியது. மணி...மணி..மணி... தி கிங் மேக்கர்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களும், குழுக்களும் அறிவிக்கப்பட , ஆடத் தெரியாத ஆட்களை எல்லாம் அனுப்பி ஏன் மானத்தை வாங்குகிறீர்கள் என கொஞ்சம் ஆவேசம் காட்டினார் ஆர்.கே.செல்வமணி...மனுஷனுக்கு என்னக் கோபமோ!

இந்த வாரம் கொஞ்சம் சந்தோஷமும், பரபரப்பும் மட்டுமே இருக்கிறதே என நினைத்து நிம்மதி அடவதற்குள் மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் மரணம். இந்தி சீரியல் நடிகை பிரதியூசா தற்கொலை செய்து கொள்ள மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

 தற்கொலை செய்த பிரதியூசாவின் உருகவைக்கும் கடைசி ஸ்டேட்டஸ் http://bit.ly/1MIU8GR 

போன வருஷம் பீர் வாங்கின நயன்தாரா, இந்த வருஷம் அடி வாங்கிய நயன்தாரா பாணியில் ஆளாளுக்கு செய்திகள் பரப்ப, சென்னை கோயம்பேட்டில் வீடு வாங்கியுள்ள நயன்தாராவை மர்ம கும்பல் தாக்கியதாக செய்தி பரவியது, சம்மந்தப்பட்ட அபார்ட்மெண்ட் அருகே விசாரித்தால் என்னது நயன்தாரா இங்க குடி இருக்காங்களா என ஆச்சர்யத்தில் ஜொள்ளு விட்டவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதே உண்மை... உங்க ஏப்ரல் 1ம் தேதிய இப்படியெல்லாமா கொண்டாடுவீங்க! 

இந்த வாரம் படங்கள் எப்படி பாஸ் என்றால் எல்லாமே சுமார் தான் ஹலோ நான் பேய் பேசுறேன் பார்க்கலாம் என ஒரு க்ரூப் குழப்ப. பேசாம கி&கா பாருங்க கரீனா, அர்ஜுன் ரொமான்ஸ் தரம்... என இன்னொரு நட்பு வட்டாரம் அங்கலாய்க்க, அடப் போங்கடா என குங் ஃபூ பாண்டா 3 பார்க்கக் கிளம்பும் கும்பல் தான் அதிகமாக இருக்கிறது. யா...ஹூ....ஈய்ய்ய்ய்ய்...

டார்லிங் விமர்சனத்திற்கு க்ளிக்கவும்: http://bit.ly/1TnucC2

நாரதன் விமர்சனத்திற்கு க்ளிக்கவும்: http://bit.ly/1PMknqC

இம்புட்டுதே இந்த வாரம்! 

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்