சிம்பு நயன்தாரா படம் எப்போ ரிலீஸ்? வீடியோவில் விடை சொல்லும் பாண்டிராஜ்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா, சூரி நடிப்பில் உருவாகி, வெளியாக காத்திருக்கும் படம் “இதுநம்மஆளு”. எப்போ வெளியாகும் என்பதை வீடியோ ஒன்றை வெளியிட்டு குறிப்பால் உணர்த்திவிட்டார் இயக்குநர்.

இப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதுநம்மஆளு படத்தில் வரும் சில காட்சிகளே.

அந்த வீடியோவில் படம் எப்போது வெளியாகும் என்பதற்கான குறியீடையும் இணைத்துள்ளது தான் வீடியோவின் சுவாரஸ்யமே. சூரியின் டைலாக்கில் “ எங்கேயும் சொன்ன நேரத்துக்கு வரமாட்டான், அவன் நினைச்ச நேரத்துக்குத்தான் வருவான்” என்று சிம்புவை பற்றிச் செல்வது போன்ற இக்காட்சியே அதற்கு சான்று...

வீடியோவைக்காண
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!