தூங்காவனம் இயக்குநர் குடும்பத்தை நெகிழ வைத்த கமல்ஹாசன்

கமல்ஹாசனிடம் எட்டு வருடங்களாக உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவரை தூங்காவனம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் கமல்.

ராஜேஷூக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கமல்ஹாசன் பெயர்வைத்து வாழ்த்தியிருக்கிறார். அக்குழந்தைக்கு ஹோசிகா ம்ருணாளினி என்று பெயர் சூட்டினார் கமல்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளை படமாக ராஜேஷ் தன்னுடைய சமுகவலைதளத்தில் பகிர்ந்து, “ இந்தப் படங்கள் நிச்சயம் உன்னுடைய பொக்கிஷங்களில் ஒன்றாகவும், எதிர்காலத்தில் சிறந்த பரிசாகவும் இருக்கும்” என்று தன் மகளுக்காகப் பகிர்ந்திருக்கிறார். ராஜேஷ் மனைவியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!