வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (05/04/2016)

கடைசி தொடர்பு:11:38 (05/04/2016)

ஊரெல்லாம் இதே பேச்சு, ரஜினி ரசிகர்களுக்கு என்னாச்சு?

ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிக்கொண்டிருக்கும் படம் கபாலி. தங்கள் பங்குக்கு ஏதாவதொரு செயலைச் செய்து எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இவர்களுக்கு என்னாச்சு? இவ்வளவு கொண்டாட்டத்தில் இருக்கிறார்களே என்று எல்லோரும் சொல்கிற மாதிரி, ரஜினி உருவத்தை சாக்லெட் சிலையாக வடிவமைத்து கபாலியை வைரல் ஹிட் லிஸ்டில் தக்கவைத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி நடித்துவரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தை கவர்ந்த சென்னையிலுள்ள தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது. கபாலியில் ரஜினி வெள்ளை தலைமுடியும், தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் இந்த சாக்லெட் ரஜினிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

அந்த பேக்கரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாக்லெட் ரஜினியைப் பார்த்து ரசிக்கவே ரசிக பட்டாளங்கள் குவிந்துவருகின்றன.  அதுமட்டுமில்லாமல் சாக்லெட் ரஜினியுடன் இளசுகள் செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

கபாலி படம் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் இவ்வாறான சுவாரஸ்ய நிகழ்வுகள் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பையும் விளம்பரத்தையும் ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடிக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்கிவருகிறார். 

மேலும் படங்களுக்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்