ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சூர்யா!

சாலைவிபத்தில் அடிபட்ட ஒரு பெண்ணுக்கு சற்றும் தாமதிக்காமல் உதவி செய்துள்ளார் சூர்யா...

சூர்யாவின் எஸ்3 படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆந்திர பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஆந்திரா அருகில் உள்ள சித்தூரில் முடித்துவிட்டு தனது ஹோட்டலுக்குத் திரும்பி கொண்டிருந்தார் சூர்யா.

வழியில் ஒரு கணவன் மனைவி   விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் சாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாராம். இரவு ஒன்பது மணி வேளையில் அந்தப் பகுதியைக் கடந்தபோது இதை கவனித்த சூர்யா சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  அங்கு முதலுதவிகள் செய்துவிட்டு திருப்பதியிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்களாம். அதுவரையில் அவர்களுடனே சூர்யா இருந்தாராம்.

உயிருக்குப் போராடிய ஒருவரை உடனடியாக சூர்யா மருத்துவமனையில் சேர்த்த இந்தச் செய்தி ஆந்திராவில் பெரிதாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!