வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/04/2016)

கடைசி தொடர்பு:15:19 (05/04/2016)

சித்தார்த்துக்குப் போட்டியாகக் களமிறங்குகிறாரா சமந்தா?

லூசியா என்ற கன்னடப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த  இயக்குநர் பவன் குமாரின் அடுத்த படம்  'யூ டர்ன்'.  இந்தப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கிறதாம். இது ஒரு மர்மமான, க்ரைம் த்ரில்லர் படம். ஒரு போலீஸ் கேஸ், அது எப்படி நடைபெறுகிறது என்பதைப் பற்றிய இந்தப்படத்தில் கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாம். கன்னடத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தைத் தமிழில் எடுக்கும் உரிமையை சமந்தா வாங்கியிருப்பதாகவும் அவரே தயாரித்து நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
 
பவன்குமாரின் முதல் படமான லூசியா படத்தைத் தமிழில் எடுக்கும் உரிமையை வாங்கி அதைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருந்தார் சித்தார்த். எனக்குள் ஒருவன் என்ற பெயரில் வெளியான அந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பின் தங்கிய  படம் என்றே சொல்வார்கள்.
 
சித்தார்த்தோடு காதல், கல்யாணம் என்றெல்லாம் பேசப்பட்டவர் சமந்தா . அந்தக்காதல் முறிந்து இருவருக்கும் மோதல் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. சித்தார்த் ஏதாவது கருத்துச் சொன்னால் சமந்தாவை நினைத்துத் தான் சொல்கிறார் என்கிற பேச்சு வருவது வழக்கமாகிவிட்டது.
 
இப்போது சமந்தா, பவன்குமாரின் யு டர்ன் படத்தை வாங்கி தயாரித்து நடித்தால் சித்தார்த்துக்குப் போட்டியாகவே அவர் இதைச் செய்கிறார் என்று சொல்லத்தொடங்கிவிடுவார்கள்.  சமந்தா நாயகியாக நடித்திருக்கும் விஜய்யின் தெறி சூர்யாவின் 24 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்