வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (05/04/2016)

கடைசி தொடர்பு:16:58 (05/04/2016)

வாட்ஸப்பில் பரவும் பேய்ப் படக் கதை பார்ட் 2!

whatsaapல வந்தது... இப்படி ஒரு தலைப்புடன் நமக்கும் அதே வாட்ஸப்பில் வந்த ஒரு கதை....

நேத்திக்கு ஒரு தமிழ் பேய்ப் படம் பார்க்கப் போயிருந்தேன். ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் . என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன என் புள்ளையக் காணோம் . போன் பண்ணா " அப்பா இங்க ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் . ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா 35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் .

மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன். விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க ஏரியா வுக்குப் போற வண்டி . வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது . கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறயல . யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .

டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் . என்ஜின் சத்தம் கேக்கலை . conducter மற்றும் பயணிகள் யாரும் இல்லை ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது . மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டது . நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா இருக்கோன்னு பயம்.

திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் - விளக்குகள் எரிய ஆரம்பித்தன ...... தட தட வென நடத்துனரும் சுமார் 20 பயணிகளும் வண்டிக்குள் ஏறினார்கள் . என்னைப் பார்த்து " எருமை மாடு , வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம் , நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே ? அறிவு இருக்கா உனக்கு"ன்னு செம டோஸ் விட்டாங்க .

சிரிக்க மட்டுமே...

இப்படி உங்களிடமும் வாட்ஸப், முகநூலில் வரும் சினிமா சார்ந்த கதைகள், உங்களின் சொந்த அனுபவங்கள் இருப்பின் cinema@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பவும். உங்கள் பெயர்களுடன் பகிரப்படும்.... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்