ஆறு வீரர்கள் எட்டு கேப்டன்கள் ஒன்பது கோடி - நட்சத்திர கிரிக்கெட் முழுவிவரம்

நடிகர்சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” வரும் 17ம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 6 ஓவர்கள் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுவார்கள். தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் தலைநகர் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது “ 'மதுரை காளைஸ்', 'சென்னை சிங்கம்ஸ்', 'நெல்லை டிராகன்ஸ்', 'தஞ்சை வாரியர்ஸ்', 'திருச்சி டைகர்ஸ்', 'ராமநாடு ரைனோஸ்', 'கோவை கிங்ஸ்' மற்றும் 'சேலம் சீட்டாஸ்' என்று 8 அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள்.இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

இதில்,

சென்னை சிங்கம்ஸ் - சூர்யா

மதுரை காளைஸ் - விஷால்

கோவை கிங்ஸ் - கார்த்தி

நெல்லை டிராகன்ஸ் - ஜெயம் ரவி

ராம்நாட் ரைனோஸ் - விஜய் சேதுபதி

தஞ்சை வாரியர்ஸ் - ஜீவா

சேலம் சீட்டாஸ் - ஆர்யா

திருச்சி டைகர்ஸ் - சிவகார்த்திகேயன்

இக்கிரிக்கெட் போட்டியின் மொத்த உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிகிறது.

தவிர, போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!