மீண்டும் வருகிறார் என்கவுண்ட்டர் ஏகாம்பரம் - கலக்குங்க வடிவேலு

வடிவேலு ஹீரோவாக நடித்த “இம்சை அரசன் 23ம் புலிகேசி”  படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால், அந்த வழியையே பின்தொடர நினைத்து, தெனாலிராமன், எலி படங்களிலும் ஹீரேவாகவே நடித்தார் வடிவேலு. ஆனால் மற்ற இரண்டு படங்களும் முதலுக்கே பங்கமாக அமைந்தது.

கடந்த தேர்தலில் வடிவேலுவின் பிரச்சாரங்களும், காமெடியனாக நடிக்க வந்த வாய்ப்புகளை வடிவேலு உதறித்தள்ளியதாலும் எந்தப் படமும் இல்லாமல் கடந்த ஐந்துவருடங்கள் ஓடிவிட்டன. அடுத்த தேர்தலே வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் படங்களில் காமெடியனாக நடிக்கத் தயராகிவிட்டார் வடிவேலு.

சகலகலாவல்லவன், அலெக்ஸ் பாண்டியன், படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படம் “ கத்தி சண்டை”. இந்தப் படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கவிருக்கிறார் வடிவேலு. முன்னரே இருவரும் சேர்ந்து நடித்த திமிரு படத்தின் காமெடிக்காட்சிகள் ஹிட் அடித்ததால் அந்த கலவையை இந்தப் படத்திலும் இருக்கும் என்கிறார்கள். அதோடு ஏற்கெனவே சுராஜ் இயக்கிய தலைநகரம், மருதமலை ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் இருந்தது. அவற்றைப் போல இப்படமும்  காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்கிறார் இயக்குநர் சுராஜ்.

தவிர, மீண்டும் வடிவேலு களமிறங்குவதால் மற்ற காமெடி நடிகர் தங்களின் மார்க்கெட் என்னாகுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!