மீண்டும் நடிப்பீர்களா? ரசிகர்களின் கேள்விக்கு அசின் பதில்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஸ்டார் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் அசின், தொழிலதிபர் ராகுல் சர்மாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் செட்டிலாகிவிட்டார். ஆனாலும் மீண்டும் இவர் நடிப்பாரா என்பதே இளசுகளின் கேள்வி. அதற்கான விடை கீழே...

அசின் ஒரு ப்ளாஷ்பேக்:

தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004) படத்தின் மூலம் அறிமுகமானவர், கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தார். கடைசியாக தமிழில் அவர் ஹிட் கொடுத்த படம் காவலன் (2011).  தமிழிலிருந்து இந்திக்கு இடம்மாறிய அசின், அமீர்கான், சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்ஷய்குமார், என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையை விட்டு ஒதுங்கினார். எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சினிமா வாய்ப்புகள் வருவதாகவும், நாயகியாக அசின் நடிப்பார் எனவும் பல வதந்திகள் இவரைச்சுற்றி வந்தன. இதற்கெல்லாம் சமுகவலைதளத்தில் பதிலளித்துள்ளார் அசின்.

‘‘என்னைப் பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகின்றன. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். நடிக்க வேண்டிய படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டேன். அதுபோல் விளம்பரப் படங்களுக்கான ஒப்பந்தங்களையும் முடித்து விட்டேன். தற்போதைய நிலையில் நான் படங்களில் மீண்டும் நடிக்க வில்லை.’’ - அசின். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!