சாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது - பாரதிராஜா பரபரப்புப் பேச்சு | Bharathiraja and Bala fighting for Kutra Parambarai

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (06/04/2016)

கடைசி தொடர்பு:15:05 (06/04/2016)

சாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது - பாரதிராஜா பரபரப்புப் பேச்சு

குற்றப்பரம்பரை யார் பக்கம் என்பதை சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா. கொஞ்ச காலமாகவே குற்றப்பரம்பரை என்ற தலைப்பில்  யார் படமாக்குவது என்ற போட்டி இயக்குநர்களான பாரதிராஜாவிற்கும், பாலாவிற்கும் இடையே  நிலவி வருகிறது.

இந்நிலையில் குற்றப்பரம்பரை படத்திற்கான தொடக்கவிழாவை உசிலம்பட்டியில் நடத்தி அனல் பறக்க பேசினார் பாரதிராஜா. அவர் பேசியதாவது,

“என் இனிய தமிழ்மக்களே,

ஒரு காலத்தில் நீங்கள் என்ன இனம் என்று கேட்டால், தமிழ் என்று தான் சொல்லுவேன். அதற்காக என் தந்தையையும், தாயையும் நினைவு கூறவில்லையென்றால் நான் மனிதனே இல்லை. அதுபோல் நான் பிறந்த இடம் தான் எனக்கு அடையாளம். என் அடையாளத்தைத் தொலைத்துவிட மாட்டேன்.

குற்றப் பரம்பரை என்று சொல்லுவதை விட தியாகப் பரம்பரை என்று தான் சொல்லவேண்டும். பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அமெரிக்காவை பிடித்தனர். இதுபோன்ற பல வரலாறுகள், தியாகங்கள் இங்கே கிடக்கிறது. இவர்களின் வீர வரலாற்றை இங்கு சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை.

ரத்னகுமார் 1992ல் குற்றப்பரம்பரை கதையை என்னிடம் சொல்லவந்தார். “கதையை கேட்கும்போதே மூன்று முறை எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. கடைசிக் காட்சிகளை சொல்லும்போதே நிறுத்தி இதைப் பண்ணுவோம் என்று உறுதி கூறினேன்.

சிவாஜியிடம் தான் முதலில் நடிக்கப் பேசியிருந்தோம். முதல்மரியாதை படப்பிடிப்பின்போது, மதுரை மொழியில் பேசிக்காட்டி, திரும்பிச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனே சிவாஜி, “ நீ காட்டான் டா” என்றால் நான் காட்டான் இல்லை, நான் ஒரிஜினல். நாங்க தாய்மொழியை விட்டு வரலனு சண்டை போடுவேன். நான் இந்த இனத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.

வீரமும் விவேகமும் இருக்கணும்னு பசும்பொன் கூறுவார், இப்போது நாம் விவேகத்தை கற்றுக்கொண்டிருக்கிறோம், ஆனால் வீரத்தை தொலைத்து விடாதீர்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். வீரம் தொலைந்தால் உன் இனத்தினுடைய அடையாளமே தொலைந்துவிடும். 

சிவாஜி, இன்னும் சில மூத்த நடிகர்கள் என்று இத்தனை வருடங்களாக இந்தப் படம் தள்ளிச்சென்றதற்கு காரணம்,  இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடவுள் என்னை நியமித்திருக்கிறார் போலும். இத்தனை ஆத்மாக்களும் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறதோ என்று எண்ணுகிறேன். இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும். இப்படம் குற்றப் பரம்பரையல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை இது. சுயமரியாதை பிறந்த மண் இங்கே தான். அந்த சுயமரியாதையை என் படைப்பால் காப்பாற்றுவேன்.” இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்