செக் மோசடி வழக்கு... சிவகாசி நீதிமன்றத்தில் சேரன்! | Cheran in court for Cheque bounce case

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (06/04/2016)

கடைசி தொடர்பு:15:36 (06/04/2016)

செக் மோசடி வழக்கு... சிவகாசி நீதிமன்றத்தில் சேரன்!

செக் மோசடி வழக்கில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான சேரன், அவரது மகள் நிவேதாபிரியதர்ஷினியும் சிவகாசி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜாராகியுள்ளனர்.

சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில், திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சடித்ததற்காக, இயக்குநர் சேரனும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் சேர்ந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளனர். வங்கியில் பணம் இல்லாததால் அந்தக் காசோலைகள் திரும்பிவந்து விட்டதாம். வேலை முடித்துக்கொடுத்தும் இன்னும் அச்சகத்திற்கான பணத்தை சேரன் கொடுக்கவில்லை. 

அச்சகத்தை சேர்ந்தவர் பலமுறை சேரனிடம் பணம் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடிக்கவே இதையடுத்து அச்சக மேலாளர் செல்வம் சிவகாசி நடுவர் மன்றத்தில் கடந்த வருடம் பிப்ரவரி 7ம் தேதி வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று கோர்ட்டுக்கு வந்தது. இதனையடுத்து சேரன், நிவேதா பிரியதர்ஷினி இருவரும் நேரில் ஆஜராகவேண்டுமென நீதிமன்றம் உத்திரவிட்டது.  இந்நிலையில் இருவரும் செவ்வாய்க்கிழமையான நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதி சதீஷ்குமார் வழக்கை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்