வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (07/04/2016)

கடைசி தொடர்பு:16:07 (09/04/2016)

அஜித்துக்குச் சவால் விடும் அமெரிக்க நடிகை

Fast & Furious படப் புகழ் அமெரிக்க நடிகையான மிச்செல் ரோட்ரிக்ஸ் (37), ஒரு கார் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் காரில் இதுவரை 225கிமீ வேகத்திற்கு மேல்(!) சென்றதில்லை எனக் கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் தயாரான ஜாகுவார் F-Type SVR காரில் 323.4 கிமீ வேகத்தில் சென்று பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு அவர் தேர்வு செய்த இடம், அமெரிக்காவைச் சேர்ந்த நெவாடா பாலைவனத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலை. இவ்வளவு வேகம் செல்வதற்கு, வழக்கமான ஜாகுவார் F-Type R காருடன் ஒப்பிடும்போது, பின்பக்க ஸ்பாய்லர், டைட்டானியம் எக்ஸாஸ்ட், மேம்படுத்தப்பட்ட முன்பக்கம், 567bhp பவர் & 700nm டார்க்கை வெளிப்படுத்தும் சூப்பர் சார்ஜர் பொருத்தப்பட்ட 5.0 லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின் என காரின் ஏரோடைனமிக்ஸ்காக பல மாறுதல்களை F-Type SVR காரில் ஜாகுவார் செய்துள்ளது. எனவே 0 - 100கிமீ வேகத்தை 3.5 விநாடிகளிலும், அதிகபட்சமாக 320கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் ஜாகுவார் F-Type SVR தான் ஜாகுவார் நிறுவனம் தயாரித்துள்ள வேகமான காராகும்.

 

இந்தச் சாதனையை நிகழ்த்திய பிறகு மிச்செல் ரோட்ரிக்ஸ் கூறியதாவது; " இந்த காரை ஓட்டுவது அட்டகாசமான அனுபவமாக இருந்தது. ஸ்டைலான ஜாகுவார் F-Type SVR காரில் எனது தனிப்பட்ட அதிகபட்ச வேகத்தை எட்டியதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 323 கிமீ வேகத்தில் கூட கார் ஸ்டெபிளாக இருந்ததுடன், கையாளுமையும் சூப்பர்.

காரை ஓட்டும்போது கவனமாகவே செயல்பட்டாலும், தொழில்முறை ரேஸ் ஓட்டுனர் உடன் இருந்ததாலேயே நம்பிக்கையுடன் காரை வேகமாக ஒட்ட முடிந்தது. Fast & Furious படங்களில் செய்ய விரும்பியதை தற்போது சாதித்துவிட்டேன்" என தனது உற்சாகத்தை அப்படியே ட்விட்டரில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். S.W.A.T, Battle Los Angeles, Avatar, Resident Evil எனப் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும், Fast & Furious சீரிஸில் வெளிவந்திருக்கும் ஏழு பாகங்களில், நான்கில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் கலந்துகொண்ட ஃபார்முலா 3 கார் பந்தயத்தின் ஸ்பீட் கூட 250கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.

என்னம்மா இப்படி பின்றிங்களேம்மா!!!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்