காஜல் அகர்வாலுக்கு மிகவும் பிடித்த நான்கு விசயங்கள் என்ன தெரியுமா?

ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த நடிக, நடிகைகளின் பிடித்தமான விஷயங்கள், விருப்ப உணவுகள், செல்லப்பெயர்களைத் தெரிந்துகொள்ள உச்ச ஆர்வத்தில் இருப்பார்கள், அவருக்காகவே தமிழைத்தாண்டி இந்தி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துவரும் காஜல் அகர்வால், தன் ரசிகர்களுக்காக சில ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஜல்அகர்வால் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக,

காதல்

நான் எளிதில் காதல்வசப்படுகிற பெண். ஆனாலும் இதுவரை எனக்கு பிடித்தமானவரை சந்திக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் வரும்போது காதலிப்பேன். அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்

பிடித்த உணவுகள்! 

நன்கு சமைக்கத்தெரிந்த சாப்பாட்டு பிரியை நான். ஆப்பமும் தேங்காய்ப்பாலும் என் உணவுப் பட்டியலில் என்றும் முதலிடம். ஐஸ்கிரீம், கேக் விரும்பி சாப்பிடுவேன். கேக் செய்யவும் தெரியும். ஒரு காலத்தில் அசைவ உணவுகளை ஒரு கட்டு கட்டுவேன். அதன்பிறகு மாமிசம், பால் இரண்டையும் தொடுவது இல்லை. சைவத்துக்கு மாறிய எனக்கு இப்போதைக்கு முட்டை தான் பிடித்த உணவு. தமிழ் நாட்டுக்கு டிராவல் பண்ணும்போது இட்லி, சாம்பார், சட்னியை விரும்பி சாப்பிடுவேன்.

பயணம்

பயணங்கள் மிகவும் பிடித்தமானவை. விமானத்தில் அடிக்கடி சென்று சலித்து விட்டது. சாலையில் நெடுந்தூரம் செல்ல விரும்புகிறேன். ஐரோப்பிய நாடுகளில் சாலைப் பயணம் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். கடற்கரை, மலைப்பிரதேசங்கள் ஆகிய இரண்டு இடங்களிலும் பயணம் செல்ல பிடிக்கும்.

இயற்கையும் காஜலும்!

நான் இயற்கையின் காதலி. இயற்கையின் அழகுடன் இருக்கும் எல்லா இடங்களுமே எனக்கு பேவரைட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!