இளையராஜாவின் இளைய மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜாவுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நாள் யுவனின் தாயார் ஜீவா பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் யுவனே அறிவித்துள்ளார். 2015 ஜனவரி மாதம், யுவன், ஜாஃப்ரூன் நிஷார் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் அப்பா ஆனதைத் தொடர்ந்து இவருக்கு டுவிட்டரில் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு,
” அப்பா யுவனுக்கு வாழ்த்துக்கள். அம்மா பிறந்தநாளில் பெண் குழந்தை பிறந்துள்ளது. உண்மையிலேயே நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்” என கூறியுள்ளார்.
இவர் தவிர சிம்பு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.