வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (08/04/2016)

கடைசி தொடர்பு:13:24 (08/04/2016)

நட்சத்திர கிரிக்கெட்: அரசு முடிவு என்ன?

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலை நீடித்து வந்தது.  மே16ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவும் என்பதால் இதில் சற்றே சந்தேகப் போக்கு இருந்தது.

இப்போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பு தேர்தல் நேரம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேலும் இப்போட்டிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இந்திய தேர்தல் கமிஷனிலிருந்து நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்