ரசிகர்களை ஏமாற்றினாரா சூர்யா?

சூர்யா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று பென்சில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.

சூர்யா ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் என்கையில் கண்டிப்பாக ரசிகர்கள் அதை ஆர்வத்துடன் ஓபன் செய்து பார்ப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் இன்று அந்த பென்சில் லின்கை ஓபன் செய்தபோது ஈராஸ் நிறுவனம் படத்தின் உரிமை வாங்கிய காரணத்தால் அதை ப்ளாக் செய்துள்ளனர். டிரெய்லர் வெளியான பத்து நிமிடங்களில் அது பிளாக் செய்யப்பட்டுவிடது. அதற்குக் காரணம் படத்தின் பாடல் உரிமையைக் கொடுக்கும்போதே, பாடல் வீடியோ உரிமையும் அந்நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அவர்களிடம் தடையில்லாச் சான்று பெறாமல் டிரெய்லரில் பாடல் காட்சிகளை இணைத்ததுதான் சிக்கலுக்குக் காரணமாம்.

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கத்தில் இருந்து இன்னும் வெளியாகாமல் இருக்கும் பென்சில் படத்தின் டிரெய்லரை சூர்யா நேற்று வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படம், சூர்யா வெளியிட்டார் என்றாலே கண்டிப்பாக அது சினிமா துறையில் பெரிய விஷயம்.

அப்படி இருக்கையில் சம்மந்தப்பட்ட பிவிஎஸ் சினிமாஸ் படத்தின் தக்க உரிமைகள் குறித்த சாதாரண தகவல்கள் கூட இல்லாமல் ஒரு பெரிய நடிகரை வெளியிட வைத்தது எப்படி?. இந்நிலையில் படத்திற்கும் சூர்யாவுக்கும் பெரிதாக சம்மந்தமே இல்லாத நிலையில் அவர் வெளியிட்டார் என்ற காரணத்திற்காக லின்கைக் க்ளிக் செய்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமல்லவா மிஞ்சும்.

இச்சிக்கல் இன்று சரி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!