வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (09/04/2016)

கடைசி தொடர்பு:13:14 (09/04/2016)

முதல்முறையாக சந்தோஷ்நாராயணன் நடிக்கப்போகிறார்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி நடிப்பில் உருவாகிவரும் படம் இறைவி. ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தனித்தன்மை பெற்று வருகிறது. அதே போல் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் கபாலி படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் என்கிற பட்சத்தில் சந்தோஷுக்கு இப்போது ரசிகர்கள் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலுக்கு பாடி நடனம் ஆடி நடிக்கவிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்