சசிகுமார் புதியபடத்தின் நாயகி இவர்தான் | Nikila vimal committed as heroine for Sasikumar's newfilm

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/04/2016)

கடைசி தொடர்பு:15:32 (09/04/2016)

சசிகுமார் புதியபடத்தின் நாயகி இவர்தான்

 

தாரைதப்பட்டை படத்தைத் தொடர்ந்து வசந்தமணி என்பவருடைய இயக்கத்தில் வெற்றிவேல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சசிகுமார். அந்தப்படத்தின் எல்லாவேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயராகிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அடுத்தபடத்தைத் தொடங்கிவிட்டார் சசிகுமார். அவரே தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் அந்தப்படத்தை பிரசாத்முருகேசன் எனும் புதியவர் எழுதி இயக்குகிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விருதுநகர் பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கப் பல நடிகைளைப் பரிசீலித்து கடைசியாக வெற்றிவேல் படத்தில் நடித்த நாயகியையே இந்தப்படத்திலும் நாயகியாக்கிவிட்டார்களாம்.

வெற்றிவேல் படத்தில் மியாஜார்ஜ், நிகிலாவிமல், வர்ஷா என மூன்றுபேர் நாயகிகள். இம்மூவரில் நிகிலாவையே புதியபடத்துக்கும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். ஏற்கெனவே மலையாளத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவருக்கு வெற்றிவேல்தான் தமிழில் முதல்படம். இரண்டாவது படமும் சசிகுமாரோடு சேர்ந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்