வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (09/04/2016)

கடைசி தொடர்பு:15:08 (09/04/2016)

கே.வி.ஆனந்த் ஹாரிஸ்ஜெயராஜ் பிரிந்தனர்?

 

அனேகன் படத்துக்கு அடுத்து விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த். அந்தப்படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்துக்கு இசையமைக்க ஹிப்ஹாப்தமிழா ஆதியை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கிய முதல்படம் கனாகண்டேன், அந்தப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கிய அயன், கோ, மாற்றான், அனேகன் ஆகிய படங்களுக்கு ஹாரிஸ்ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார்.

இந்தப்படத்தில் ஹாரிஸ் இல்லை, ஆதியை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதனால் இந்த மாற்றம்? பட்ஜெட் காரணமாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படம் தொடங்கும்போதே ஒரு மாற்றமாக வேறு இசையமைப்பாளரோடு பணிபுரிய கே.வி.ஆனந்த் நினைத்திருந்தததாகச் சொல்கிறார்கள். அவருடைய பட்டியலில் முதலில் அனிருத் இருந்திருக்கிறார்.

அனிருத்துக்கு வரிசையாகப் பல படங்கள் இருக்கின்றன, அதனால் இந்தப்படத்தில் பணியாற்றவியலாது என்று அனிருத் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதன்பின் ஆதியிடம் பேசி அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்