ரஜினி, கமலைத் தொடர்ந்து தனுஷ் - தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி | LYCA to produce Dhanush's Vada Chennai !

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (09/04/2016)

கடைசி தொடர்பு:16:55 (09/04/2016)

ரஜினி, கமலைத் தொடர்ந்து தனுஷ் - தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி

வடசென்னையை தயாரிக்கிறது லைக்கா.வெற்றிமாறன் வட சென்னை படத்தினை இயக்குகிறார். இப்படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. விசாரணை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம்,

'வட சென்னை ' தனுஷ் ,சமந்தா நடிக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது.மே மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனமும் தனுஷின் ஒண்டர் பார் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறது .

இது பற்றி லைக்கா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் கூறும் போது, வட சென்னை படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் .இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தனுஷின் கொடி படத்தின் விநியோக உரிமை லைக்கா செய்யப்போவதாக வரும் தகவல் பொய்யானது. இப்போது ரஜினியின் '2.0' ,ஜி. வி பிரகாஷ் குமாரின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு',விஜய் ஆன்டனியின் 'எமன்' ,கமல் நடிக்கும் அடுத்த படம் ஆகியனவற்றைத்  தயாரிக்கிறது லைக்கா . மேலும் 'வெற்றிவேல்' படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close