வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (09/04/2016)

கடைசி தொடர்பு:17:15 (09/04/2016)

என்ன நடக்கிறது சிவகார்த்திகேயன் படத்தில்? அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்

புதுஇயக்குநர் பாக்கியராஜ்கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதியபடத்தை இயக்கவிருக்கிறார் மோகன்ராஜா. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தப்படத்துக்குள் நயன்தாரா எப்படி வந்தார்? இந்தப்படத்தின் கதைப்படி நன்றாக நடிக்கக்கூடிய கதாநாயகி வேண்டும் என்பதுதான் இயக்குநரின் முடிவாக இருந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் இமேஜூக்குப் பொருத்தமாகவும் இருக்கவேண்டும் நடிப்பும் இருக்கவேண்டும் என்று பார்த்தபோது நயன்தாரா இதற்குப்பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதே சமயம், தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார் நயன்தாரா.

அதுமட்டுமின்றி மாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படங்களும் வரிசைகட்டி நிற்கின்றன. அப்படியிருக்க இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கேற்ப அவருடைய தேதிகள் கிடைக்குமா? என்கிற சந்தேகம் இருந்திருக்கிறது. ஆனால், படத்தின் கதையைக் கேட்ட நயன்தாரா, இதில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி தேதிகள் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகிய இருவருக்குமே நல்லபெயரைப் பெற்றுத்தரக்கூடிய படமாக இருக்கும் என்று சொல்கின்றனர்.

இந்நிலையில் அடுத்த ஆச்சரியமூட்டும் தகவல், முதன் முறையாக நஸ்ரியாவின் கணவரும், மலையாள டாப் நடிகருமான ஃபகத் ஃபாசில் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். மலையாளத்திலேயே மிகவும் வித்தியாச படங்களைத் தேடி நடிக்கும் ஃபகத் ஃபாசில் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்கிறார் எனில் கண்டிப்பாக மோகன் ராஜா தனிஒருவன் பாணியில் அடுத்த வித்தியாச படமொன்றை உருவாக்குகிறார் என்றே தோன்றுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்