வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (09/04/2016)

கடைசி தொடர்பு:21:05 (12/04/2016)

அஜீத் அமைதி... கத்தி பிரச்சினை.. பாலா ஆவேசம் - இந்த வார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral

 

இந்த வாரம் கொஞ்சம் போராட்டங்களும், போர்க்கொடிகளுமென சினிமா உலகம் காரசாரமாக மாறியுள்ளது. சென்ற வார  ரீவைண்டைப் பார்க்கலாம்.

சம்பந்தப்பட்ட சில செய்திகளுக்கு கொடுத்திருக்கும் லிங்கைத் தட்டி, விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்!

    ரம்பமே அமர்களமாக அஜித் வருவாரா நட்சத்திரக் கிரிக்கெட்டுக்கு என்ற கேள்விகளுடன் களைகட்டியது. அவரு வருவாரு ஆனா வரமாட்டாரு என கோலிவுட் வாசிகள் கொஞ்சம் குறும்பு காட்டினார்கள். அதற்கு விடை அமைதியாகவே இருக்கும் அஜீத்துக்குதான் தெரியும் என்கிற நிலையில், வார இறுதியில் 'இந்தாங்க பிடிங்க.. வீரர்கள் லிஸ்ட் என்று வெளியிட்டார்கள். அதில் ஹீரோயின்கள் பெயரும் இருக்க, ‘அப்ப அவங்களும் ஆடுவாங்களா?’ என்று ரசிகர்கள் குழம்பினர்.

 பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மூன்று முறை தற்கொலைக்கு முயன்றார் என்று அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் ஜாஜு கொளுத்திப் போட்டதில், கொதித்துப்போனார் ப்ரியங்காவின் தாயார் மது சோப்ரா. ட்விட்டரில் அதற்கு பதில் விளக்கம் கொடுத்தார் பிரகாஷ் ஜாஜு.
    
ழக்கம் போல ரசிகர்கள் ஒரு பக்கம் தலடா மங்கத்தாடா என சவுண்டு விட பொன்வண்ணனை அழைத்து என்ன தான் நடக்கிறது சங்கத்தில் அஜித் என்ன சொல்கிறார் என்றால் அவரும் அதே பாணீயில் அவர் வருவாரா இல்லையா எனக் கேட்க அவர் சொன்னது... இதோ இங்கே...


    ரு பக்கம் அஜித் பிரச்னை என்றால் விஜய்க்கு வேறு விதமாக இரண்டு வருடங்கள் கழித்து பிரச்னை தலை தூக்கியுள்ளது. கத்தி படத்தின் காட்சிகள் திருடப்பட்டவை என தாக பூமி படத்தின் காட்சிகள் ஆதாரங்கள் என வெளியாகி ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிரச்னையைக் கொடுத்து வருகிறது. அவரைக் கைது செய்ய வேண்டும் என்னும் அளவுக்கு பிரச்னை தற்போது முற்றியுள்ளது. விடாது கருப்பு!

    ராஜமௌலியிடம் மைக்கை நீட்டி கட்டப்பா ஏன் பாகுபாலியைக் கொன்றார் என்றால் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! . பாகுபலி 2-க்கு மரண வெயிட்டிங் ஜி!

    நடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை என அஜித்துக்கு எதிரான கடிதம் ஒன்று சுற்றலில் சமூக வலைகளில் வைரலாக அஜித் ரசிகர்களைக் கொஞ்சம் கோபமான சூழலுக்கு மாற்றியுள்ளது. ஐ.நா சபை பிரச்னை கூட தீர்ந்துடும் போல!

    குற்றப் பரம்பரை படம் பிரச்னை வலுவாகி பாரதி ராஜா, பாலா என ஆளுக்கொரு பக்கமாக சண்டையிட்டு வருகிறார்கள். பாலாவை நாய் பாஷை தெரிந்தவன் என ரத்தின குமார் சொல்ல ஆமா நான் நாய் பாஷை தெரிந்தவன் தான். அதான் நன்றியோட இருக்கேன், நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கொதித்து, பாரதிராஜாவுக்கும், ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை விடுத்தார் பாலா!.
 
    பாரதிராஜா, சாதி அடையாளத்தை மறந்துவிட முடியாதுஎனக் கூற பொதுவான சினிமா ரசிகர்களை சற்றே முகச் சுளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. சாதி மதமே வேண்டாம் என படங்களில் காட்டிய இமயமா இப்படி என பலரும் மன வருத்தம் அடைந்துள்ளனர். ஆயிரம் தாமரை மொட்டுகளே!

    நான் ஈ படத்தில் சல்மான் கான் நடிக்கிறார் என ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.சுதீப் கேரக்டரா அல்லது ஈ கேரக்டரா என சல்மான் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஈ யா நடிச்சா அது கெஸ்ட் ரோல் ஜி!

    ஹ்ருத்திக் ரோஷன் எனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விட்டார் அவரைக் கைது செய்ய வேண்டும், என கங்கனா அடுத்த கட்ட அவதாரம் எடுக்க பாலிவுட் பற்றிக் கொண்டுள்ளது... என்னம்மா நீங்க இப்படி அடிச்சுக்கறீங்களேம்மா!

    இந்த வாரம் எக்ஸ்க்ளூசிவ்வாக மனிதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் , சசி குமாரின் வெற்றிவேல் படத்தின் டிரெய்லர் வீக் எண்டை முடித்து வைக்க பென்சில் டிரெய்லரும்  வெளியாகியுள்ளது.. இந்த வருஷமாவது பென்சில் ரிலீஸ் ஆகுமா?

    ண்டனுக்கு போன அக்‌ஷய் குமார் சரியான விசா கொண்டு வராமல் போகவே அங்கே கைது செய்யப்பட்டு அந்தா ஓரமாப் போயி உக்காருங்க என்னும் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார். கில்லாடிக்கே இந்த கதியா!

    சிவகார்த்திகேயன் மோகன் ராஜா கூட்டணியில் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகி என்னும் அதிர்ச்சி அடங்குவதற்குள் படக்குழுவில் இணைந்துள்ளார் மலையாள நடிகர் ஒருவர்! அட.. இவரா.. வாங்க வாங்க’ என்று வரவேற்றது கோலிவுட்! வேற மலையாள நடிகர் யாருன்னா அங்க விட்டு வெச்சிருக்கோமா?

    ந்த வாரப் படங்கள் என்ன நிலமை ஜித்தன் 2 போனவர்கள் காதில் ரத்தம் வராக் குறையாக தப்பிப் பிழைத்து வர, சர்தார் கப்பர் சிங்குக்கு போனவர்கள் பழைய சரக்கை, பழைய புட்டியிலேயே கொடுத்திருக்கிறார்கள் என்று அங்கலாய்த்தனர். தி ஜங்கிள் புக்ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்யம் இரண்டும் கல்லா கட்டி தமிழ் ரசிகர்களையும் கொஞ்சம் ஈர்த்துள்ளது.


இம்புட்டுதான் இந்த வாரம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்