விஜய்யின் அடுத்த படம்தொடங்கியது, படத்தின் பெயர்? | Today Shooting kickstarts Vijay's New Movie

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (11/04/2016)

கடைசி தொடர்பு:10:40 (11/04/2016)

விஜய்யின் அடுத்த படம்தொடங்கியது, படத்தின் பெயர்?

 

விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு  இன்று தொடங்கியது. இந்தப்படத்துக்கு இப்போதைக்கு தளபதி 60 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 இந்தப்படத்தை, எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கிறது.
 
அழகியதமிழ்மகன் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில், உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி ஈவிபி ஸ்டுடியோவில் பூஜையுடன்  தொடங்கியது.
 
இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'கத்தி' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதிஷ் இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார்.. மற்றும் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள் .

முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய்யுடன் கைகோர்க்கிறார்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய,  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
 

படத்திற்கு எடிட்டிங்  பிரவின் கே.எல். , கலை இயக்குனர் -  பிரபாகர் , ஸ்டன்ட்   -  அனல்அரசு,  காஸ்டியூம்  டிசைனர்   -  சத்யா N.J
 
இன்று தொடங்கும் படப்பிடிப்பு இரண்டு நாட்கள்  நடைபெறுகின்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close