என்னைப் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் - பதறும் இமான் அண்ணாச்சி

 இப்போதெல்லாம் சினிமாவுக்கு வருகிறவர்கள் குறும்படம் எடுத்து தங்களது திறமைக்கு அடையாளம் தேடிக் கொண்டு வருகிறார்கள்;வாய்ப்பு பெறுகிறார்கள். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி போன்றவர்கள் சினிமாவில் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த வகையில் 'ஒரு லைக் ஒரு கமெண்ட்'என்கிற பெயரில் ஒரு குறும்படம் எடுத்து திரையுலகினர் மத்தியில் திரையிட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று இருக்கிறார் மாஸ்ரவி .

சினிமாவே பார்க்காமல் விமர்சனம் என்கிற பெயரில் திரையுலகிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பொறுப்பற்று செயல்படும் இளைஞர்கள் பற்றிய கதை இது. பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றால் எப்படி திரையுலகினர் பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்கிறது படம்.

நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் 'மாஸ்'ரவி. இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில், இயக்குநர் ராகேஷ் பேசிய போது " நான் முதலில் இந்த மாஸ்ரவியை 'தகடு தகடு' படத்தில் நடிக்க வைத்தேன். பதற்றமாக இருந்தார் ஏன்யா பதற்றம், எனக்கும் இதுதான் முதல்படம் நான் பதற்றமில்லாமல் இயக்குநர் போல நடிக்கவில்லையா ?அதுபோல். நீயும்நடி. பதற்றத்தைக் காட்டக் கூடாது என்றேன். மறுபடி 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ' படத்தில் நடிக்க வைத்தபோது பதற்றமில்லாமல் நடித்தார். நல்ல முன்னேற்றம் தெரிந்தது எப்படி என்றேன். ஆறு குறும்படங்களில் நடித்து விட்டதாகக் கூறினார். திருட்டுவிசிடி பற்றிப் பேசுகிறார்கள்.

அதை ஒழிக்கவே முடியாது. திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. எப்போதும் திருடனைப் பொதுமக்கள்தான் பிடித்து தர்ம அடி கொடுப்பார்கள்.திருட்டுவிசிடி விஷயத்தில் பொதுமக்களே திருட்டு வேலை செய்கிறார்கள். இங்கு வந்துள்ள இமான் அண்ணாச்சியை என்படத்தில் நடிக்கக் கேட்ட போது அதிக சம்பளம் கேட்டதால் நடிக்க முடியாமல் போய்விட்டது. " என்றார் . உடனே இமான் அண்ணாச்சி எழுந்து'' எனக்கு இடையில் உள்ளவர்கள் செய்தவேலை அது .

நான் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்க மட்டுமே அதிகச் சம்பளம் கேட்பதுண்டு. அதே போல இதற்கும் கேட்டிருக்கிறார்கள். நல்லகதை இருந்தால் எனக்குச் சம்பளம் இரண்டாம் பட்சம்தான். இதற்குமுன்பு ஒரு மேனேஜர் இருந்தார்.அவரை இப்போது மாற்றிவிட்டேன். என்னை இப்போது நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் . என் சம்பளம் சம்பந்தமாக வதந்திகளை நம்ப வேண்டாம்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!