”தப்பான படம் நானே குடுத்தாலும் ஜெயிக்க வைக்காதீங்க” 24 பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா அதிரடி! | 24 movie Audio Launch Surya speech

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (11/04/2016)

கடைசி தொடர்பு:13:58 (20/04/2016)

”தப்பான படம் நானே குடுத்தாலும் ஜெயிக்க வைக்காதீங்க” 24 பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா அதிரடி!

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன.

சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் சூர்யா பேசுகையில், அனைவருக்கும் நன்றி கூறி ஆரம்பித்தவர் , நான் இங்க நிற்கறதுக்கு காரணமா இருக்கற அத்தனை தம்பிகளுக்கும் நன்றி.. என் இந்த டிரெய்லரைப் பார்த்துட்டு நீங்க கைதட்டினீங்களே... அப்படி இருந்துச்சு. இதுக்காகத் தான் ஒரு வருஷம் உழைப்பக் கொட்டினோம்... நான் உங்களையெல்லாம் சந்திச்சே ஒரு வருஷம் ஆச்சு.. மத்த ஹீரோக்கள் எப்படின்னு தெரியல, ஆனா நான் உங்களை சந்திக்கலைங்கறங்கற குற்ற உணர்ச்சி இருக்கு. இருந்தாலும் மற்ற ஊர்கள்ல இருந்து கூட இந்த நிகழ்ச்சிய பார்க்க வந்ததுக்கே நன்றி சொல்லிக்கிறேன்...

இந்தக் கதையக் கேக்கும் போதே நான் தயாரிக்கணும்னு தோணுச்சு. இந்த மொத்த டீமுக்கும் நான் நன்றி சொல்லணும். எனக்கு ஒரு நாலரை மணி நேரம் கதை சொன்னாரு விக்ரம் கே குமார்.  கதைய கேட்டு முடிச்சோன நான் எழுந்திருச்சு நின்னு கைதட்டின்னேன். அப்படி ஒரு படம் இது..

அப்பா இப்படியெல்லாம் பேசினதே கிடையாது அவ்ளோ ஆத்மார்த்தமா பேசினாரு. நான் இந்த அளவுக்கு இங்க வந்து நிற்கறேன்னானா அதுக்கு நீங்க தான் காரணம்

“ சரியான படத்த நல்ல படத்த ஜெயிக்க வைங்க, தப்பான படம் நானே குடுத்தா கூட ஜெயிக்க வைக்காதிங்க... அப்போ தான் நல்ல படங்கள் குடுக்க முடியும்”..

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அழகான ஆடியோ லான்ச்சா மாத்திட்டீங்க.. இந்தப் படம் பத்தி ஞானவேல் நான் எல்லாரும் பேசிகிட்டு இருந்தப்போ எல்லாரும் சொன்னது ஏ.ஆர்.ரஹ்மான் தான் கரெக்டா இருப்பாருன்னு சொன்னாங்க. இந்தப் படத்துக்காக எந்த லெவலும் போகணும்னு தோணுச்சு, ரஹ்மான் சார் கிட்ட அப்படியே போய் மியூசிக் போடச் சொல்லிக் கேட்க முடியுமா?.... ரஹ்மான் சாருக்கு ஒரு மெஸேஜ் ஒண்ணு போட்டேன்.

”நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படறேன்னு சொன்னேன்... ஒரு 2 நாள் கழிச்சு ஓகேனு பதில் அனுப்பினார். ரஹ்மான் சார் ஒரு அரைமணி நேரம் ஓகேவான்னு கேட்டாரு. விக்ரம் ஓகேன்னு சொல்லிட்டாரு”.

எனக்கு நாலரை மணி நேரம் சொன்னவரு அவருக்கு எப்படி அரை மணிநேரத்துலன்னு யோசிச்சேன். ரம்ஜான் நோன்பு டைம் , ஒரு 5.30 மணி கதை சொல்லிகிட்டு இருக்கும் போதே ”நான் போயிட்டு வர்றேன்னு இருங்கன்னு சொல்லிட்டு நோன்பு முடிச்சுட்டு திரும்ப வந்தவர்,  ஆறரை மணி நேரம்  பொறுமையாகக் கதை கேட்டு ஓகே சொன்னாரு.

அவரு ஓகே சொல்லி திரும்ப ஒரு மெஸேஜ் அனுப்பினதுதான் இன்னும் நம்பிக்கையா இருந்தது. பார்த்தா முதல் பாட்டே ’காலம் என் காதலி” , அவரு ஆரம்பமே அப்படி ஒரு பாட்டு குடுத்தாரு... பாட்டு வந்துடுச்சு இதுக்கு எப்படி விஷுவல் பண்ணப் போறோம்.. என்ன செய்யப் போறோம்னு யோசிச்சோம்.

இதுக்கு ஒரு குட்டிக் கதை சொல்லணும்னு ஆசைப் படறேன்

” ஒரு சின்னக் குழந்தை ஒரு சாக்லேட் கடைக்கு அம்மாவோட போகுது...அங்க குழந்தையோட அம்மா சாக்கலேட் எடுத்துக்கன்னு சொன்னா எடுக்கலை, கடைக்காரரும் எடுத்துக்கோன்னு பாட்டில் மூடியெல்லாம் ஓபன் பண்ணித் தர்றாரு. அந்தக் குழந்தை அப்பவும் எடுத்துக்கலை. அப்பறம் கடைக்காரர் அவரே கையால நிறைய சாக்லேட் எடுத்துக் குடுத்தோன சட்டைல அப்படியே வாங்கிகிட்டா அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணோட அம்மா வெளிய வந்து கேட்டாங்க என்ன இன்னிக்கு சாக்லேட் எடுன்னு சொல்லியும் எடுக்காம இருந்தியேன்னு அதுக்கு அந்தக் குழந்தை சொன்னா அந்த அங்கிள் கை பெரிசா இருந்தது, என் கை சின்னது, அவரு கையால எடுத்தா நிறையா சாக்கலேட் கிடைக்கும்னு சொன்னா”.. அப்படித் தான் கடவுளும் நாம கேட்டா கொஞ்சமா கேட்போம் அதே அவரு குடுத்தா நிறையாக் குடுப்பாரு. அப்படித்தான் ரஹ்மான் சாரும் அவரு கிட்ட மியூசிக்லாம் கேக்க முடியாது நாம நினைக்கிறத விட அதிகமா குடுப்பாரு..

நான்லாம் ரொம்ப தற்குறிங்க, அதனால தான் என்னை சுத்தி அறிவாளிகளா சேர்த்து வேலை செய்யறேன். ரஹ்மான் சார் அவ்ளோ பணிவானவர். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் உங்க கூட வேலை செய்யறது.

 

பேசிக்கொண்டிருக்கும் போதே சமந்தா பத்தி சொல்லுங்கண்ணா என்றவுடன் “சமந்தா அந்த ஷூட்டிங் ஸ்பாட் வந்தாலே “ டேய் நீ இவ்ளோ ஒழுங்காடா” மாதிரி எல்லாரும் ஸ்மார்ட்டா மாறிடுவாங்க,

 

 

நித்யா மேனன் மரியாதையானவங்க... 20 வருஷம் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த தம்பதின்னு அவங்களுக்கு சொன்னா போதும் அப்படியே மாறிடுவாங்க அது எப்படின்னு தான் தெரியல. என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அண்ணா கேரக்டர் பத்தி சொல்லுங்கண்ணா என ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, அதெல்லாம் படத்துல பார்க்கலாமே என சிரித்தவர் படத்துல ஆர்ட் டைரக்‌ஷன், அவ்ளோ நல்லா பண்ணியிருக்காங்க. படம் ஆத்மார்த்தமா செஞ்சிருக்கோம்,.

எங்களுக்காக எட்டு மணியிருந்து இந்த ஆடியோ ரிலீசுக்காக காத்திருந்ததுக்கே “ ஐ லவ் யூ” கண்டிப்பா இந்தப் படம் நல்லா இருக்கும்னு நம்பறோம் என முடித்தார்.

நமக்குக் கிடைச்ச நேரம், இந்த வாழ்க்கை அவ்ளோ முக்கியம், +2 கொஸ்டீன் பேப்பர் பார்த்துட்டு 20க்கும் மேலான மாணவர்கள் தற்கொலை செஞ்சுருக்காங்க. ப்ளீஸ் அப்படியெல்லாம் செய்யாதிங்க. பொறுமையா இருங்க நம்மல்லாம் இங்க சும்மா வரல, வாழ்க்கை பேப்பர் இல்ல கட் பண்ண..நான்லாம் டம்மி பீஸு காலெஜ் படிச்சுட்டு என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தேன். அதனால காத்திருங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும் என்றார். 

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்