துருக்கி படப்பிடிப்பில் ஆட்டம் போடும் கெளதம்மேனன் (வீடியோ இணைப்பு) | Enai Noki Paayum Thota‬ Turkey Shooting Spot video

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (11/04/2016)

கடைசி தொடர்பு:14:08 (11/04/2016)

துருக்கி படப்பிடிப்பில் ஆட்டம் போடும் கெளதம்மேனன் (வீடியோ இணைப்பு)

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் “எனைநோக்கிப் பாயும்தோட்டா” படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த கையோடு, அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்கு படக்குழு துருக்கி சென்றுள்ளது. அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. அதற்கான லோக்கேஷனில் ஆர்டிஸ்டுகளுக்கு நடன இயக்குநர் பயிற்றுவிக்கும் நேரத்தில், கெளதமும் நடன ஜோதியில் இறங்கிவிட்டார். அவரும் நடனமாடுவதை, படக்குழு வீடியோவாக பதிவுசெய்து, இணையத்தில் பகிர்ந்துள்ளனர். உடன் தனுஷ், நாயகி மேகா ஆகாஷ் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் அவ்வீடியோவில் பதிவாகியிருந்தனர்.

இதுபோல, படப்பிடிப்பு தொடங்கிய நாளில் கூட, தனுஷ் நடிக்கும் வொர்க்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தியது எனை நோக்கிப் பாயும் தோட்டா டீம்.

சுவாரஸ்ய வீடியோவிற்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்