”எனக்கு வில்லனே என் அண்ணன் தான்” சூர்யாவைப் பழி வாங்க நினைக்கும் கார்த்தி! | 24 movie audio launch special

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (11/04/2016)

கடைசி தொடர்பு:17:41 (11/04/2016)

”எனக்கு வில்லனே என் அண்ணன் தான்” சூர்யாவைப் பழி வாங்க நினைக்கும் கார்த்தி!

பிரம்மாண்டமாக சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது.

டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் படக்குழுவையும், படத்தையும் வாழ்த்திப் பேசினர்,

சிவகுமார் பேசுகையில்,

சைலண்ட் கில்லர் சூர்யா, சைலண்ட் சகலகலா வல்லவன், முதல் முதல்ல 1975ல கல்யாண் ஹஸ்பிடல்ல ஒரு சின்ன தொட்டியில சுண்டு விரல அசைச்சிகிட்டே ஒரு குழந்தை படுத்திருந்தான். இப்போ உண்மையாவே சைலண்ட் கில்லர் தான் அவரு என்றார்..

மதன் கார்க்கி பேசுகையில்

சகலகலா வல்லவன் கமல் சாருக்கு அப்பறம் வித்யாசமான முயற்சி எடுக்கறது சூர்யா சார் தான், இவங்க கூட்டணி பிரம்மாண்டமான கூட்டணி.. ஒரு மிகப்பெரிய முயற்சி, அதுக்கு மிகப்பெரிய அளவுல ஏ.ஆர்.ரஹ்மான் குடுத்துருக்காரு, கண்டிப்பாக இந்தப் படம் பிரம்மாண்ட ஹிட் அடிக்கும் என்றார்.

சரண்யா பேசுகையில்,

ஒரு பெரிய படத்துல அம்மா ரோல் இருக்கறதே பெரிய விஷயம் , அதுலயும் நல்ல கேரக்டரா அமையுறது ரொம்ப பெரிய விஷயம் எனக்குக் கிடைச்சிருக்கு. என்னை முதல் முதல்ல நடிகையாக்கினது மணி சார், என்னை அம்மாவா நடிக்க வெச்சது விக்ரம் தான். சூர்யா சைலண்ட் கில்லர்னு அவங்கப்பா சொன்னாரு, அவரு சைலண்ட்லாம் இல்லை,ஆனா யாரு கிட்ட சைலண்ட்டா இருக்கணுமோ அவங்க கிட்ட இருப்பாரு. ரொம்ப ஒழுக்கமானவரு , இது ரெண்டாவது படம் சூர்யாவோட முதல்ல படம் ஹரி சாரோட வேல் படம், இப்போ 24.. அப்போ அதிகமா பேசினதே இல்லை, இப்போ நாங்க ரெண்டு பேரும் உண்மையாவே அம்மா ,மகனா நல்ல கம்பெனியாவே இருந்தாரு”.

வைரமுத்து பேசுகையில்,

அண்ணன் சிவக்குமார் அருகிலிருந்தேன்... ஒரு தந்தையாக அவரது நெகிழ்ச்சியை பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு அவரது பிள்ளைகள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்,. அவரது வளர்ச்சியை அவர் தந்தை பார்க்கவில்லை, ஆனால் அவரது பிள்ளைகளின் வளர்ச்சியைக் காண அவர் கொடுத்து வைத்துள்ளார். சினிமா துறை இது தொழில், கலைத் தொழில் , சினிமா ஒழுங்குக்கும், ஒழுக்கத்துக்கும் வினோதமாக இருக்கும் என நினைப்பவர்கள் இதைக் குறித்துக்கொள்ளவும், சினிமாவில் ஒழுக்கமானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சூர்யா தான் உதாரணம்...

சூர்யா நல்ல குழுவை தேர்வு செய்கிறார்... ”நாகேஷ் மரணப் படுக்கையில் இருக்கிறார்.. கமல் ஹாசன், நான் , என் மகன் கபிலன் ஆகியோர் ஏழு நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தோம்.நோயாளிகளுக்கு சில சின்னச் சின்னப் பொய்கள் பிடிக்கும், அப்படித்தான் கமல் ஹாசன் கவலைப்படாதிங்க சார் நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க, என ஒரு நல்ல பொய்யை சொல்கிறார், அதற்கு நாகேஷ் சொல்கிறார், டேய்! பொய்யெல்லாம் சொல்லாத நான் நிறைய முட்டாள்களோட வேலை செய்திருக்கேன், அதனால எனக்கு ஆயுள் கம்மி என்றார், ஆனால் சூர்யா நிறைய அறிவாளிகளோடு வேலை பார்க்கிறார் அவருக்கு ஆயுள் அதிகம் என்றவர் சினிமா ஒரு எக்ஸ்க்யூஷன், படப்பிடிப்புத் தளத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும், அப்படி விக்ரம் கே குமார் நல்ல காட்சியமைப்பை கொடுத்துள்ளார். ரஹ்மான் வேறு வேறு விதமாக இசையை கொஞ்சம் கூட நகலெடுக்காமல் எல்லா இசையும் கேட்ட பாட்டா இருக்கக் கூடாது, போட்ட பாட்டாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்தப் படம் வெள்ளிவிழா பெறுமென நான் பொய்யெல்லாம் சொல்ல   மாட்டேன், 20 நாட்கள் ,மூன்று வாரம் ஓடினாலே ஹிட் தான். கள்ளத்தனமாக படம் பாராதீர்,இந்தப் படம் வெற்றி பெறும் என்றார்.

கார்த்தி பேசுகையில்,

இந்தப் படம் கொஞ்சம் கொஞ்சம் நான் பார்த்தேன்...இந்தப் படத்துல மணின்னு ஒரு பையன் நடிச்சிருக்கான் ஹீரோவா, கஜினி படம் சுட்டும் விழிச் சுடரே பாட்ட நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல பார்த்தேன்,. பாட்ட பார்த்தோன சொன்னேன் பொண்ணுங்களாம் செத்தாளுகன்னு, இப்போ மறுபடியும் நடந்துருக்கு, படத்துல என்னோட நானே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு... அவ்ளோ அழகா இருந்தாரு. அப்பறம் ஒரு வில்லன் நடிச்சிருக்காரு. ஒரு பத்து வயசு வரைக்கும் எனக்கு வில்லனா இருந்தது என்னோட அண்ணன் தான். ஆனால் இப்போ ஸ்க்ரீன்ல வேற லெவல்... ரஹ்மான் ராக்கிங் சார், அப்படியே சவுண்ட் ட்ராக் ரிலீஸ் பண்ணுங்க. எங்க மொபைலுக்கு தேவைப்படும் என்றவரிடம்

உங்களுக்கு ஒரு டைம் ட்ராவல் கிடைச்சா உங்க அண்ணன் 5 வயசுலருக்காரு, எப்படி பழி வாங்குவீங்க? என்ற கேள்வி கேட்டபோது,

”என் அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் பிராணிகள் மேல என்ன அபப்டி ஒரு பாசம்னு தெரியாது, ரெண்டு பேரும் வீட்லருந்து நாய வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க, அப்போ நானும் வரேன்னு சொன்னா அதெல்லாம் வேணாம் நீ சின்னப் பையன்னு சொல்லிடுவாங்க.. இப்போ எனக்கு அந்தச் சான்ஸ் கிடைச்சா எங்க அப்பாவ அந்தத் தெருவுல நிக்க வெச்சு இவங்க ரெண்டு பேரும் என்ன செய்யறாங்கன்னு பாக்கணும்”.என கலகலவென பேசிய கார்த்தி 24 படத்தின் பிரம்மாண்ட டிரெய்லரை வெளியிட்டார்.

 24 பட இசைவெளியீட்டு விழா கலக்கல் ஆல்பத்திற்கு: http://bit.ly/1qiHeF8

-ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்