சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்? - பஹத் பாசில் பேட்டி

 மலையாளத் திரையுலகில் இருந்து தமிழ்த் திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான் , நிவின் பாலி ஆகியோருக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் தமிழில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலுக்கு மரியாதை, வருஷம் 16, மற்றும் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகனான பஹத் பாசில் தமிழில் அறிமுகமாக இருக்கும் அடுத்த நாயகன். தனக்கென பொருந்தும் கதாபாத்திரத்தில், கதையின் போக்கை நிர்மாணிக்கும் பாத்திரமாக இருந்தால் போதும் , கதாநாயகனாக இல்லாமல் போனாலும் சரி என்று நடிக்கும் பஹத் பாசில் மொழி பிராந்தியங்களையும் தாண்டி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்ட இருக்கிறார்.

அவர் நடித்த ' மகேஷிண்டே பிரதிகாரம்' சென்னையில் மட்டுமே ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு இதுவே சான்று. பஹத் தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிக்கும் பெயரிடப் படாத ,பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகக் கூறுகிறார் பஹத் பாசில்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது....

'தமிழ்ப் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் 'தனி ஒருவன்' படம் பார்த்த பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் எனச் சொல்லலாம்.நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னைப் பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதும் கூட.என்னுடைய கதாபாத்திரம் தமிழ்த் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!