கபாலி ரிலீஸ் எப்போது? - ரகசியத்தை உடைத்தார் ரஜினிகாந்த்! | Rajini announced about Kabali Release

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (12/04/2016)

கடைசி தொடர்பு:12:03 (12/04/2016)

கபாலி ரிலீஸ் எப்போது? - ரகசியத்தை உடைத்தார் ரஜினிகாந்த்!

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைகோர்த்திருக்கும் படமான கபாலி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் வெளியாக இருக்கிறது.

ரஜினிக்கு டான் கேரக்டர் என்று வெளியாகிவிட்ட நிலையிலும், இளைஞர்களின் மனம்கவர்ந்த இயக்குநர் ரஞ்சித், ரஜினியை எப்படி இயக்கிருப்பார் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பாடல்கள் சந்தோஷ் நாராயணின் ஸ்டைலில், ரஜினி பாணியும் சேர்ந்த கலவையாக பாடல் வந்திருக்கும் என்பதால் இசை ரசிகர்களுக்கு இடையேயும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் பத்ம விபூஷன் விருதைப் பெற டெல்லி செல்லும் வழியில் நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்லும்போது, ‘மே இறுதியில் அல்லது ஜூன் முதல்வாரத்தில் படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.(சற்றுமுன், பத்மவிபூஷன் பெற்றுக் கொண்டபோது)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்