வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (13/04/2016)

கடைசி தொடர்பு:10:58 (13/04/2016)

இதுநம்மஆளு படத்தைக் குடும்பத்தோடு பார்க்கலாம் - சென்சார் அனுமதி

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவிற்கு அடுத்து வெளியாகவிருக்கும் படம் இதுநம்மஆளு. சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் பசங்க படம் வெளியாகும் நேரத்திலேயே இதுநம்மஆளு படமும் வெளியாகியிருக்க வேண்டும். இயக்குநருடன் மோதல், தயாரிப்புச் சிக்கல், ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடியாமல் இருந்தது என்று பல்வேறு பிரச்னைகளால் இழுத்தடித்துவந்த இப்படம்  தற்பொழுது சுமூகமான முடிவை எட்டியுள்ளது.

தணிக்கைத் துறை அதிகாரிகளின் பார்வைக்கு சென்று, சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றியிருக்கிறது. சென்சார் பணிகள் முடிவடைந்ததையடுத்து வரும் மே 6ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல்பிரதி என்ற அடிப்படையில் பாண்டிராஜ் தயாரிக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்