விசாரணைக்கு பாலா வர மறுப்பது ஏன்? ரத்னகுமார் கேள்வி

குற்றப்பரம்பரை பிரச்னை இன்னும் முடிந்த பாடில்லை, சில நாட்களுக்கு முன்பு பாலா நான் குற்றப்பரம்பரை வரலாற்றையே எடுக்கவில்லை. ஒரு கற்பனைக் கதையையே நான் எடுக்கப் போகிறேன். இது தெரியாமல் என்னைப் பற்றி அவதூறாக பாரதிராஜாவும், ரத்தினகுமாரும் பேசி வருகிறார்கள். அவர்களை நான் எச்சரிக்கிறேன் எனக் கூறியிருந்தார் பாலா.

இந்நிலையில் எழுத்தாளர் ரத்தினகுமார், குற்றப்பரம்பரை படத்தின் கதைவிவாதத்தில் 

கலந்துகொண்ட வேலராமமூர்த்தி அப்போது கேட்ட விசயங்களை வைத்துத் தான் கூட்டாஞ்சோறு கதையையே எழுதினார். அதனால் அதைத்தழுவி எடுக்கப்படும் கதையும் என்னுடையதுதான் எனவே அதைப் படமாக எடுக்கக்கூடாது என்று பாலா மீதும், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி மீதும் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்ததாகவும் அவர்கள் விசாரணைக்கு அழைத்தும்  பாலா தரப்பிலிருந்தும், வேல ராமமூர்த்தி தரப்பிலிருந்தும் பதில் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

இதனால் குற்றப்பரம்பரை கதையைப் படமாக எடுத்தால் இருவர் மீதும் வழக்குத் தொடர்வேன் என ரத்தினகுமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குற்றப்பரம்பரை கதையை நான் எடுக்கவில்லை அதைச் சார்ந்த கற்பனைக் கதையை தான் நான் எடுக்கிறேன் என பாலா கூறியும் இன்னும் இந்தப் பிரச்னை முடிந்தபாடில்லை. இதற்கு பாரதிராஜா, பாலா இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே முற்றுப்பெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!