வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (13/04/2016)

கடைசி தொடர்பு:13:13 (13/04/2016)

ஒரு முகன் முடிந்தது! மற்றொரு முகன் ஆன் தி வே!!

 

அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த்ஷங்கர் இயக்கிவரும் புதிய படத்தின் பெயர் “இருமுகன்”. விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்துவரும் இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன் இருவரும் நாயகிகளாக நடித்துவருகிறார்கள்.

இருமுகன் டீஸர் எப்போ ரிலீஸாகும் என்ற சீக்ரெட்டை இயக்குநர் ட்விட்டரில் உடைத்திருக்கிறார். “ ஒரு முகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, மற்றொரு முகனின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறோம், இந்த நேரமே டீஸருக்கு ஏற்ற நேரம்”, என்று ட்விட்டி இருக்கிறார்.

இதன்படி, முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை அருகிலுள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற பகுதியில் நடந்துவருகிறது. விக்ரமுடன் நித்யாமேனன் நடித்துவருகிறார். அடுத்த கட்டப் படப்பிடிப்பில் தான் நயன்தாரா கலந்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனந்த்ஷங்கரின் லக்கியான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் படத்திற்கு இசையமைத்துவருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்