தெறி பிரச்னை முடிவுக்கு வந்தது! ரசிகர்கள் மகிழ்ச்சி | Vijay's Theri tickets problems are solved , booking started

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (13/04/2016)

கடைசி தொடர்பு:13:34 (13/04/2016)

தெறி பிரச்னை முடிவுக்கு வந்தது! ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படமான தெறி நாளை தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக வெளியாகிறது. ஓரிரு தினங்களாக ரசிகர்கள் காட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை விட அதீத கட்டணம் வசூலிப்பதாக படத்திற்கு பிரச்னை இருந்தது..

இந்நிலையில் பல ஊர்களில் டிக்கெட்டு விற்பனைகள், அட்வான்ஸ் புக்கிங் என ஆரம்பிக்கப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும்படி வலியுறுத்தியதாகவும் அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து 120 ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது எனக் கூறவே படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. 

தற்போது தயாரிப்பாளர் தரப்பில் திட்டமிட்டபடி அரசு நிற்ணயித்த கட்டணத்திற்கு ஒப்புக்கொண்டதால் முன்பதிவுகள் இடையூறின்றி வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்