விஜய் vs ஷாருக்... மூன்றாவது விக்கெட்டை வீழ்த்துவாரா விஜய்? | vijay shah rukh khan movies clasing 5th time

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (13/04/2016)

கடைசி தொடர்பு:14:55 (13/04/2016)

விஜய் vs ஷாருக்... மூன்றாவது விக்கெட்டை வீழ்த்துவாரா விஜய்?


நாளை வெளியாகிறது விஜய்யின் தெறி. அட்லி இயக்கத்தில் குடும்பம், போலீஸ், ராணுவம் என்று வேறு வேறு தளங்களில் விஜய் நடித்திருக்கும் 'தெறி'  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘தெறி’ வெளியாகிற அன்றே, வெளியாகிறது ஷாருக்கானின் ‘FAN’ திரைப்படமும்.  ஒரு ரசிகன், நடிகனுக்கு முக்கியமா நடிகன் ரசிகனுக்கு முக்கியமா என்ற கருவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரசிகனாகவும், நடிகனாகவும் ஷாருக்கானே நடித்திருக்கிறார்.

இந்த நேரத்தில், இதற்கு முன் இருவரும் மோதிய படங்களைப் பற்றிய ஒரு ஜாலி அலசல்.வேலாயுதம் - ரா ஒன்


26.10.2011ல்தான் முதல்முறையாக இருவரும் தத்தம் படங்களை ஒரே நாளில் வெளியிட்டனர். வெளிநாடுகளில் சிறப்பாக ஓடிய ரா ஒன் இந்தியாவில் அளவாகத்தான் கொண்டாடப்பட்டது. வேலாயுதம் படத்துடன் மோதிய ஏழாம் அறிவுக்கு ஆரம்பத்தில் நிறைய திரையரங்குகள் ஒதுக்கப்பட்டாலும், ஒரே வாரத்தில் வேலாயுதம் அதிக திரையரங்குகளில் இடம் பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாக பேசப்பட்டது. விஜய்யின் மற்ற படங்களை கணக்கிட்டால் வேலாயுதம் ஆவரேஜ் ஹிட்தான் எனினும், ரா ஒன் -னுடன் ஒப்பிடுகையில் ஒரு படி அதிகமாகவே ஓடியது.

துப்பாக்கி - ஜப் தக் ஹை ஜான்

13 நவம்பர் 2012ல் விஜய்யின் துப்பாக்கியுடன் மோதியது ஷாரூக்கின் ஜப் தக் ஹை ஜான். ரொமாண்டிக் படமான ஜப் தக் ஹை ஜான், நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிக்கப்பட்டாலும், அனைத்து ரசிகர்களிடத்தும் இருந்து வந்த பாஸிடிவ் விமர்சனங்களால் துப்பாக்கி அதிரி புதிரி ஹிட்டடித்தது.   

தலைவா - சென்னை எக்ஸ்ப்ரஸ்


8 ஆகஸ்ட் 2013ல் வெளியான இரண்டு படங்களில் சில காரணங்களால் தமிழகத்தில் மட்டும் தலைவா ஒருநாள் பின் தங்கியது. முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களைக் குறிவைத்தே டைட்டில், ரஜினிக்காக லுங்கி டான்ஸ், சத்யராஜ் என்று ஷாருக் திட்டமிட்டு எடுத்த படம் சென்னை எக்ஸ்ப்ரஸ். தலைவா இந்த ரேஸில் பின் தங்கிவிட, சென்னை எக்ஸ்ப்ரஸ் முந்திக்கொண்டது.

சுவாரஸ்யம் என்னவென்றால், தலைவாவில்,  கதைக்களமாக மும்பை இருக்க, இந்திப் படமான  சென்னை எக்ஸ்ப்ரஸ் - சென்னையைக் கதைக்களமாகக் கொண்டிருந்தது.

                                               ----------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

கத்தி - ஹேப்பி நியூ இயர்

22 அக்டோபர் 2014ல் விஜய்யின் கத்தி வெளியாக, அடுத்த நாள் வெளியானது ஷாருக்கின் ஹேப்பி நியூ இயர். நம்பிக்கையளித்த முருகதாஸ் கூட்டணி விஜய்க்கு கை கொடுக்க, ஆரம்பத்திலேயே பாஸிடிவ் விமர்சனங்கள். ஹேப்பி நியூ இயர் ஷாருக்கிற்கு பெரிய ஹிட்டடித்த படம். பாக்ஸ் ஆஃபீஸில் இரண்டுமே வெற்றிப்படங்கள்.

தெறி - ஃபேன்


நாளை வெளியாகும் இந்த இரண்டு படங்களின் ரிசல்ட்டுக்கு வி ஆர் வெய்ட்டிங்! 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்