வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (15/04/2016)

கடைசி தொடர்பு:10:44 (15/04/2016)

3D-யிலேயே ஒளிப்பதிவாகிறதா 2.0..? - எந்திரன் அப்டேட்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய கேமிராவில் படமாக்கப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர்.

அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகளும், உடனுக்குடன் கிராஃபிக்ஸ் வேலையையும் முடித்துவிடுகிறதாம் படக்குழு.

ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடிக்க, நாயகியாக எமிஜாக்ஸன் நடித்துவருகிறார். அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கி, டெல்லியில் உள்ள மைதானத்தில் செட் அமைத்து முக்கிய காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டுவருகின்றன. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்