வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (15/04/2016)

கடைசி தொடர்பு:13:21 (15/04/2016)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் ?

அஜித் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் என நம்பப்படுகிறது.

மனிதன் படக் குழு சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினிடம், அஜித் படம் எப்போது என்ற கேள்விக்கு அஜித்துக்காக ஒரு கதையை ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் கூறியுள்ளார். எனக்கும் பிடித்துள்ளது. அஜித்திடம் பேசி வருகிறோம். அவர் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக ரெட் ஜயண்ட் மூவீஸ் அஜித் நடிப்பில் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகும் எனக் கூறியுள்ளார்.

அஜித் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீனா படம் வெளியாகி வெற்றி பெற்றது நாமறிந்ததே. அதே போல் மிரட்டல் என்னும் தலைப்பில் இருவரும் அடுத்த படம் உருவாக இருந்து, சூர்யா நடிப்பில் அப்படம் கஜினியாக வெளியாகி ஹிட்டடித்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணி எப்போது என்னும் கேள்வி ரசிகர்களிடம் பல வருடங்களாகவே இருந்து வந்தது. ஜூன் மாதம் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படமும், மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப் படமும் என இவ்விரு படங்களும் முடிந்த பின் ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்