தெறி படம் சில இடங்களில் ஏன் வெளியாகவில்லை..? | Theri release in trouble?

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (15/04/2016)

கடைசி தொடர்பு:13:27 (15/04/2016)

தெறி படம் சில இடங்களில் ஏன் வெளியாகவில்லை..?

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, பேபி நைனிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தெறி. இப்படம் சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.

டெபாசிட், அட்வான்ஸ் என எதையும் தராமல் படத்தைத் திரையிட நினைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அதனாலேயே இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர் என தயாரிப்பாளர் தரப்பிலும், தயாரிப்பாளர் டிக்கெட்டுகளின் விலையை அதிகமாக விற்கும்படி நிர்பந்திக்கிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி விற்க முடியாது என்பதாலேயே படத்தை நாங்கள் வெளியிடவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பல திரையரங்குகளில் தெறி படம் வெளியாகவில்லை. அம்பத்தூர் ராக்கி, செங்கல்பட்டு லதா திரையரங்கங்கள் என இன்னும் பல திரையரங்குகளில் தெறி படம் வெளியாகவில்லை. இதனையடுத்து ரசிகர்கள் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் எச்சரித்ததையடுத்து அனைவரும் கலைந்து போயினர்.

இதே போல் காஞ்சிபுரம் பாபு திரையரங்கத்தில் படம் வெளியாகவில்லை எனத் தெரிந்த நிலையில் ரசிகர்கள் சாலை மறியல், ரகளையில் ஈடுப்பட்டனர். மேலும் விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக இரவு 2வது காட்சி நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் இதனால் இன்னும் கோபமடைந்து பிரச்னை செய்ய போலீஸாராலும் அடக்க முடியாது போகவே போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டியதாக இருந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close